இந்தியா

உறுதி! முதல்வர் அலுவலக ஊழியருக்கு கொரோனா.... 2 நாட்கள் அலுவலகம் மூடல்

Added : ஜூன் 28, 2020
Share
Advertisement
 உறுதி! முதல்வர் அலுவலக ஊழியருக்கு கொரோனா....  2 நாட்கள் அலுவலகம் மூடல்

புதுச்சேரி : புதுச்சேரியில் முதல்வரின் அலுவலக ஊழியருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதால், இரண்டு நாட்கள் முதல்வர் அலுவலகம்மூடப்படுகிறது.

புதுச்சேரியில் நாளுக்கு நாள் கொரோனா பரவல் அதிகரித்து வருகிறது. இந்நிலையில், சட்டசபையில் முதல்வர் அலுவலக, தட்டச்சு ஊழியருக்கு நேற்று முன்தினம் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.இதைத் தொடர்ந்து, சட்டசபையில் முதல்வர் அலுவலகம் முழுவதும், சுகாதாரத்துறை சார்பில் கிருமிநாசினி தெளிக்கப்பட்டது. அதே சமயம், முதல்வர் நாராயணசாமி தனது அலுவலகத்தில் வழக்கமான பணிகளை மேற்கொண்டார்.கொரோனா தொற்று காரணமாக முதல்வர் அலுவலகம் இரண்டு நாட்கள் மூடப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

சட்டசபைக்கு வருவோர், தீவிர பரிசோதனைக்கு பின்பே அனுமதிக்கப்படுகின்றனர். சுகாதாரத்துறை அட்வைஸ்கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட முதல்வரின் அலுவலக ஊழியர், முதல்வர் அறைக்கு அடிக்கடி சென்று வந்துள்ளார். இதனால், முதல்வர் அலுவலகம் 2 நாட்கள் மூடப்படுவதுடன், முதல்வர் நாராயணசாமி தன்னை தனிமைப்படுத்தி கொள்ளவும், பொது நிகழ்ச்சிகளில் பங்கேற்பதை தவிர்க்கவும் சுகாதாரத்துறை அறிவுரை வழங்கியுள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X