இந்தியா

60 வயது மூதாட்டிக்கு தொற்றுஏனாமிலும் கொரோனா பீதி

Added : ஜூன் 28, 2020
Share
Advertisement

புதுச்சேரி : ஏனாமை சேர்ந்த மூதாட்டி கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளார்.

ஏனாமில் உள்ள குருசம்பேட்டா மீனவ கிராமத்தை சேர்ந்த 60 வயது மூதாட்டி, அருகில் உள்ள ஆந்திர பகுதியான தாளரேவு என்ற இடத்தில் அமைந்துள்ள இறால் பதப்படுத்தும் கம்பெனியில், இறால் சுத்தம் செய்யும் வேலை செய்து வருகிறார். இவருக்கு, சில நாட்களுக்கு முன் உடல்நலக் குறைவு ஏற்பட்டது.சந்தேகத்தின் அடிப்படையில் அவருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொண்டதில், தொற்று உறுதி.செய்யப்பட்டது. அதனையொட்டி அவர், ஏனாமில் உள்ள அரசு பொது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.குருசம்பேட்டா மீனவ கிராமம் மக்கள் நெருக்கம் அதிகமுள்ள பகுதியாகும். கிராமத்தை சேர்ந்த பலரை மூதாட்டி தினசரி சந்தித்து பேசி சகஜமாக பழகி உள்ளார்.

இதனால், மற்றவர்களுக்கும் தொற்று பரவி இருக்கலாம் என்பதால் அதிகாரிகள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.குருசம்பேட்டா கிராமத்தை கட்டுப்பாட்டு மண்டலமாக அறிவித்து, அந்த பகுதிக்குள் செல்லவும், வெளியே வரவும் தடை விதித்துள்ளனர். மீனவ கிராமத்தில் வசிப்பவர்களுக்கு மருத்துவக் குழுவினர் இன்று மருத்துவ பரிசோதனை மேற்கொள்ள உள்ளனர்.ஏனாமில் உள்ள தாத்தா வீட்டிற்கு வந்திருந்த, ஐதராபாத்தை சேர்ந்த 12 வயது சிறுவன் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டார். இது, தெலுங்கானா மாநிலத்தில் கணக்கில் சேர்க்கப்பட உள்ளது. இந்நிலையில், ஏனாமை சேர்ந்த மூதாட்டிக்கு தொற்று ஏற்பட்டுள்ளது அந்த பகுதி மக்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X