இந்தியா

ஒரே நாளில் 87 பேருக்கு கொரோனா ராக்கெட் வேகத்தில் பரவுது தொற்று

Added : ஜூன் 28, 2020
Share
Advertisement

புதுச்சேரி : புதுச்சேரியில் ஒரே நாளில் 87 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது.

கொரோனா பரவல் படுவேகம் எடுத்துள்ளதால் மக்கள் அச்சம் அடைந்துள்ளனர்.கடந்த ஜூன் 1ம் தேதி ஊரடங்கு தளர்த்தப்பட்ட பின், புதுச்சேரியில் கொரோனாவால் பாதிப்பவர்களின் எண்ணிக்கை ராக்கெட் வேகத்தில் உயர்ந்து வருகிறது. குறிப்பாக, கடந்த ஒரு வாரமாக ஒவ்வொரு நாளும் அதிக எண்ணிக்கையில் பாதிக்கப்பட்டுவருகின்றனர்.புதுச்சேரியில் நேற்று முன்தினம் காலை 10:00 மணி முதல் நேற்று காலை 10:00 மணி வரையிலான 24 மணி நேரத்தில் 87 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதில், புதுச்சேரி பகுதியை சேர்ந்தவர்கள் 72 பேர்; காரைக்காலை சேர்ந்தவர்கள் 15 பேர்.சதம் அடிக்கும்மாஸ்க் கம்பெனிபுதுச்சேரியில் புதிதாக பாதிக்கப் பட்டுள்ள 42 பேர், ஏற்கனவே கொரோனாவுக்கு சிகிச்சை பெறுபவர்களின் குடும்பத்தினர் மற்றும் நெருங்கிய தொடர்பில் இருந்தவர்களாவர்.முக கவசம் தயாரிக்கும் கம்பெனியுடன் தொடர்புடைய மேலும் 9 பேருக்கு தொற்று கண்டறியப்பட்டுள்ளது.இக்கம்பெனியில் பணிபுரிந்தவர்கள், அவர்களுடன் தொடர்பில் இருந்தவர்கள் என, இந்த கம்பெனியால் மட்டும் தொற்றால் பாதித்தவர்களின் எண்ணிக்கை 97 ஆக உயர்ந்துள்ளது.

புதிதாக தொற்று கண்டறியப்பட்டுள்ள 13 பேருக்கு யாரிடம் இருந்து கொரோனா பரவியது என்பது தெரியவில்லை. அவர்கள் எங்கே சென்றனர், யாரை சந்தித்தனர், யார் மூலமாக பரவியது என்பது குறித்து அதிகாரிகள் விசாரித்து வருகின்றனர்.அதிகம் பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள தனியார் செக்கியூரிட்டி கம்பெனி, தனியார் தொழிற்சாலை போன்றவற்றுடன் தொடர்பில் இருந்த 9 பேருக்கு புதிதாக தொற்று ஏற்பட்டுள்ளது.தமிழகத்தை சேர்ந்த 3 பேருக்கும் தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. காரைக்காலில் பாதிக்கப்பட்டுள்ள 15 பேரும் சென்னையில் இருந்து திரும்பியவர்கள்.

மருத்துவமனையில்388 பேர் அட்மிட்புதுச்சேரியில் 388 பேர் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வருகின்றனர். இதில், கதிர்காமத்தில் உள்ள கோவிட் மருத்துவமனையில் 225 பேர், ஜிப்மர் மருத்துவமனையில் 90 பேர், கோவிட் கேர் சென்டரில் 33 பேர் உள்ளனர்.புதுச்சேரியை சேர்ந்த 2 பேர் கடலுார், சிதம்பரத்திலும் சிகிச்சை பெற்று வருகின்றனர்.காரைக்காலில் 36 பேரும், மாகி, ஏனாம் அரசு பொது மருத்துவமனைகளில் தலா ஒருவரும் சிகிச்சையில் உள்ளனர். புதுச்சேரியின் கொரோனா பாதிப்பு பட்டியல் 619 ஆக உயர்ந்துள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X