இந்தியா

புதுச்சேரியில் காணொளி பொதுக்கூட்டம் நகர மாவட்ட பா.ஜ.,வினர் பங்கேற்பு

Added : ஜூன் 28, 2020
Share
Advertisement

புதுச்சேரி, : மத்திய வெளியுறவுத்துறை இணை அமைச்சர் முரளிதரன், புதுச்சேரி மக்களுடன் பிரதமரின் எண்ணங்களை பகிர்ந்து கொண்ட காணொளி சாதனை பொதுக்கூட்டத்தில் நகர மாவட்ட பா.ஜ.,வினர் திரளாக பங்கேற்றனர்.

மத்தியில் பா.ஜ., இரண்டாம் முறையாக பொறுப்பேற்று ஓராண்டு நிறைவு செய்ததையொட்டி, மத்திய வௌியுறவுத்துறை அமைச்சர் முரளிதரன், நேற்று மாலை 4:00 மணிக்கு புதுச்சேரி மக்களுடன், பிரதமரின் எண்ணங்களை பகிர்ந்து கொள்ளும் 2.0 சாதனை பொதுக்கூட்ட நிகழ்ச்சி நடந்தது.மாநில தலைவர் சாமிநாதன் தலைமை தாங்கினார். மத்திய வெளியுறவுத்துறை இணை அமைச்சர் முரளிதரன், மத்தியில் ஆளும் பா.ஜ.,ஆட்சியின் சாதனைகளை பட்டியலிட்டார்.புதுச்சேரியில் முதன் முறையாக நடைபெறும் இந்தக் காணொளி பேரணி நிகழ்ச்சியை தொகுதி வாரியாக நேரலையாக காண ஏற்பாடுகள் செய்யப்பட்டது.

புதுச்சேரி. பா.ஜ., தலைமை அலுவலகத்தில் இருந்து நேரலை செய்யப்பட்ட நிகழ்ச்சியை புதுச்சேரி, காரைக்கால், ஏனாம், மாகி பகுதியில் பொதுமக்கள்,கட்சி நிர்வாகிகள் பார்த்தனர்.பா.ஜ, நகர மாவட்டம சார்பாக புதுச்சேரி இளங்கோ நகரில் உள்ள மாவட்ட அலுவலகத்தில் காண ஏற்பாடு செய்யப்பட்டது. மாவட்ட தலைவர் வக்கீல் அசோக்பாபு தலைமையில், சங்கர் எம்.எல்.ஏ., முன்னிலையில், முதலியார்பேட்டை தொகுதி தலைவர் பிரகாஷ், மாவட்ட துணை தலைவர் விஜயரங்கம், முன்னாள் ஊடக துறை தலைவர் மகேஷ், நிர்வாகிகள் கிருஷ்ண மூர்த்தி, பச்சையப்பன் கலந்து கொண்டனர்.

நகர மாவட்டத்திற்கு உட்பட்ட தொகுதி தலைவர்கள் முத்தியால்பேட்டை ஹரிதாஸ், ராஜ்பவன் கணபதி, நெல்லித்தோப்பு குப்பன், உருளையன்பேட்டை தனசேகர், உப்பளம் பொறுப்பாளர் கோபி தலைமையில் 500க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X