இந்தியா

கட்டுப்பாட்டு பகுதி மக்களுக்கு அத்தியாவசிய பொருட்கள்

Added : ஜூன் 28, 2020
Share
Advertisement

புதுச்சேரி, : முதலியார்பேட்டையில் கட்டுப்பாட்டு பகுதியில் வசிக்கும் மக்களுக்கு அத்தியாவசிய பொருட்களை பாஸ்கர் எம்.எல்.ஏ., வழங்கினார்.

முதலியார்பேட்டை தொகுதியில் கொரோனா ஊரடங்கு அமல்படுத்தப்பட்ட தினம் முதல் வாழ்வாரத்தை இழந்த அமைப்பு சாரா தொழிலாளர்கள், பொதுமக்களுக்கு பாஸ்கர் எம்.எல்.ஏ., காய்கறி, அரிசி உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்கள் அடங்கிய நிவாரண உதவிகளை வீடு தோறும் வழங்கி வருகிறார். மேலும், தொகுதி முழுவதும் கிருமி நாசினிதெளிக்கவும் ஏற்பாடு செய்தார்.இந்நிலையில்முதலியார்பேட்டை தொகுதி வெள்ளாளர் வீதி, அனிதா நகர், குமரன் நகர் மற்றும் இன்ஜினியர்ஸ் காலனிகளில் கொரோனா தொற்றுநோய் உறுதி செய்யப்பட்டுள்ளது.

அப்பகுதிகளில் கிருமி நாசினி தௌித்து, அப்பகுதி மக்களுக்கு கபசுர குடிநீரை பாஸ்கர் எம்.எல்.ஏ., வழங்கினார். மேலும் அப்பகுதியில் வசித்து வரும் பொதுமக்கள் வீட்டை விட்டு வெளியே வர தடை செய்யப்பட்டு உள்ளது. இப்பகுதியில் வசித்துவரும் 80க்கும் மேற்பட்ட குடும்பங்களுக்கு 20 வகையான காய்கறிகள் 10 கிலோ அரிசி மற்றும் மளிகை பொருட்கள், பிஸ்கட், முகக் கவசங்கள் அடங்கிய தொகுப்பை நேற்று வழங்கினார்.நிகழ்ச்சியில் சமூக இடைவெளி கடைபிடிக்கப்பட்டது. சளி,காய்ச்சல், இருமல் இருந்தால் உடனடியாக மருத்துவமனை அல்லது சுகாதார ஊழியர்களை தொடர்பு கொள்ள அறிவுறுத்தப்பட்டது. நிகழ்ச்சியில் சுகாதார ஆய்வாளர்ரமேஷ், தமிழன்பன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X