இந்தியா

மீன் மார்க்கெட்டில் சமூக இடைவெளிகவர்னர் கிரண்பேடி வலியுறுத்தல்

Added : ஜூன் 28, 2020
Share
Advertisement

புதுச்சேரி : 'காய்கறி சந்தைகள், மீன் மார்க்கெட்டுகளில் சமூக இடைவெளியை கட்டாயம் பின்பற்ற வேண்டும்' என, கவர்னர் கிரண்பேடி தெரிவித்துள்ளார்.

அவர் கூறியதாவது: அத்தியாவசியப் பொருட்கள் வாங்குவதற்கு பொதுமக்கள் வெளியே செல்லும்போது கவனமாக இருக்க வேண்டும். காய்கறி சந்தைகள், மீன் மார்க்கெட்டுகளில் சமூக இடைவெளியை கட்டாயம் பின்பற்ற வேண்டும். தங்களுடைய கடைக்கு வருகின்ற வாடிக்கையாளர்களின் பாதுகாப்பை உறுதி செய்வதில் கடைக்காரர்களுக்கும் பங்கு உண்டு.எனவே, வாடிக்கையாளர்களிடம் முக கவசம் அணியும்படியும், சமூக இடைவெளியை பின்பற்றும்படியும் கூற வேண்டும்.

கூட்டம் அதிகமாக இருக்கும் பகுதிகளில் நோய்த் தொற்று பரவுவதற்கு வாய்ப்புகள் அதிகம் உள்ளது. எனவே, அனைவரும் கவனமாக இருக்க வேண்டும்.அருகில் யாராவது கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டிருக்கிறார்களா என்பது ஆரோக்கிய சேது செயலியின் மூலமாக தெரிய வரும். எனவே, அனைவரும் ஆரோக்கிய சேது செயலியை தங்களுடைய மொபைல் போன்களில் பதிவிறக்கம் செய்து பயன்படுத்த வேண்டும்.நம் அனைவருக்கும் கோவிட் தொற்று ஏற்பட வாய்ப்பு இருக்கிறது. மற்றவர்களை பாதுகாக்க நம்மை நாம் பாதுகாத்துக் கொள்ள வேண்டும். இவ்வாறு, கவர்னர் தெரிவித்துள்ளார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X