இந்தியா

கொரோனா ஊரடங்கால் பாதித்தவர்களுக்கு தி.மு.க., இளைஞரணி நிவாரண உதவி

Added : ஜூன் 28, 2020
Share
Advertisement

புதுச்சேரி : கொரோனா ஊரடங்கு அமல்படுத்தப்பட்ட நாள் முதல் பாதிக்கப்பட்டவர்களுக்கு புதுச்சேரி தி.மு.க., வடக்கு இளைஞரணி சார்பில் நிவாரண உதவிகள் வழங்கப்பட்டு வருகிறது.

தி.மு.க., மாநில இளைஞரணி (வடக்கு) அமைப்பாளர் காந்தி விடுத்துள்ள அறிக்கை:தி.மு.க., தலைவர் ஸ்டாலின், இளைஞரணி செயலர் உதயநிதி ஸ்டாலின் ஆகியோரின் வழிகாட் டுதலின்படி, கொரோனா ஊரடங்கு அமல்படுத்தப்பட்ட நாள் முதல் பாதிக்கப்பட்ட மக்களுக்கு தி.மு.க., மாநில இளைஞரணி (வடக்கு) சார்பில் பல்வேறு நிவாரண உதவிகள் வழங்கப்பட்டு வருகிறது.மண்ணாடிப்பட்டு, திருபுவனை, முத்தியால் பேட்டை தொகுதிகளில் முக கவசம், சானிடைசர் வழங்கப்பட்டது. கதிர்காமத்தில் கிருமிநாசினி தெளிக்கப்பட்டது. மாநில எல்லையில் பணியில் இருந்த போலீஸ் மற்றும் வருவாய் துறையினருக்கு முககவசம் சானிடைர் வழங்கப்பட்டது.

திருவண்டார் கோவில், திருபுவனை, உறுவையாறு, கிராமங்களில் குடும்பத்திற்கு தலா 5 கிலோ அரிசி, சர்க்கரை, காய்கறிகள் வழங்கப்பட்டது.மண்ணாடிப்பட்டு, பிள்ளையார்குப்பம், நெட் டப்பாக்கம் பகுதிகளில் நேரடியாக சென்று நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது. இலங்கை தமிழர் குடியிருப்பு, நரிக்குறவர்களுக்கு அரிசி, காய்கறி, சர்க்கரை வழங்கப்பட்டது. நிகழ்ச்சிகளில் சமூக இடைவெளி கடைபிடிக்கப்பட்டதோடு, கொரோனாவில் இருந்து தற்காத்து கொள்ளும் வழிமுறைகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X