இந்தியா

உடலக வங்கி வழங்கிய ரூ.400 கோடியை மீனவர் நலனுக்கு செலவிட வலியுறுத்தல்

Added : ஜூன் 28, 2020
Share
Advertisement

புதுச்சேரி : புதுச்சேரி மீனவர் நலனுக்காக உலக வங்கி வழங்கிய ரூ.400கோடியைமுழுமையாக பயன்படுத்த வேண்டும் என இந்திய கம்யூ., வலியுறுத்தி உள்ளது.

இதுகுறித்து அக்கட்சியின் மாநில செயலர் சலீம் விடுத்துள்ள அறிக்கை:கடலோர கிராம பேரழிவு ஆபத்து குறைப்பு திட்டம் அமல்படுத்த புதுச்சேரிக்கு உலக வங்கி ரூ. 400 கோடி வழங்கியுள்ளது.இந்த திட்டத்தின் மூலம் புதுச்சேரி, காரைக்காலில் உள்ள மீன்பிடி துறைமுகங்களை நவீனப்படுத்துதல், மீனவர்களுக்கு தொடர்பு சாதனங்கள் வழங்குதல் உள்ளிட்ட மீனவ மக்களின் வாழ்வாதாரம் உள்கட்டமைப்பு தொழில் மேம்பாடு ஆகியன நிறைவேற்ற வேண்டும்.

இந்த திட்டங்களை நிறைவேற்ற அமைக்கப்பட்ட திட்ட அமலாக்க முகமையின் பணிகள் ஆமை வேகத்தில் நகர்கின்றன. பல திட்டங்களுக்கு நிதி ஒதுக்கப்படவில்லை. புதுச்சேரி கடற்கரை சாலையில் உள்ள மேரி கட்டடம் மட்டும்தான் கட்டப்பட்டிருக்கிறது. இதுவரை ரூ.120 கோடிதான் செலவு செய்யப்பட்டுள்ளது. கையிருப்பில் ரூ. 65 கோடி உள்ளது. மீதம் ரூ. 200 கோடி வங்கியில் உள்ளது.ஆகவே, புதுச்சேரி, காரைக்கால் மீனவர்களின் நலனுக்காக உலக வங்கி வழங்கி, செலவு செய்யாமல் இருக்கும் ரூ. 265 கோடியை,அனைத்து மீனவர் நலத்திட்டங்களுக்கு பயன்படுத்த வேண்டும்.

அதற்கான நடவடிக்கைகளை அரசு காலதாமதமின்றி விரைவாக எடுக்க வேண்டும். இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X