தமிழகத்தை பின்பற்றி ஊரடங்கு ; முதல்வர் நாராயணசாமி| Dinamalar

இந்தியா

தமிழகத்தை பின்பற்றி ஊரடங்கு ; முதல்வர் நாராயணசாமி

Added : ஜூன் 28, 2020
Share

புதுச்சேரி : தமிழகத்தை பின்பற்றி ஊரடங்கு முடிவு செய்யப்படும் என முதல்வர் நாராயணசாமி கூறினார்.

இதுகுறித்து அவர் கூறியதாவது:புதுச்சேரியில் தற்போதுள்ள ஊரடங்கு ஜூலை 2-ம் தேதிவரை நடைமுறையில் இருக்கும். ஜூன் 30-ம் தேதி மத்திய அரசு விதிமுறைகளை தெரிவிக்க உள்ளது. அதன் பின் தமிழகத்தில் எடுக்கப்படும் முடிவை பரிசீலித்து அதற்கேற்ப ஊரடங்கு குறித்த முடிவு செய்யப்படும்.மாநில பேரிடர் குழு செயற்குழு கூட்டத்தில் அரசு மருத்துவமனையில் கொரோனா படுக்கை வசதிகள் இல்லை என்றால் தனியார் மருத்துவமனையை அணுக முடிவு எடுக்கப்பட்டது.மீனவர்கள் கடலில் படகுகளில் கருப்புக்கொடி கட்டி ஆர்ப்பாட்டம் நடத்தியதற்கு மூல காரணமே கவர்னர் தான்.

மீன்பிடி தடை கால நிவாரண கோப்பிற்கு கவர்னர் ஒப்புதல் அளிக்காமல் கேள்வி மேல் கேள்விகள் கேட்டு, மீனவ ஓய்வூதியம் பெறுவோர்கள் குறித்து விசாரிக்க உத்தரவிட்டுள்ளார். அரசின் செயல்பாடுகளில் தலையிட அதிகாரம் இல்லை என கவர்னருக்கு பல முறை கடிதம் அனுப்பிவிட்டேன். அரசு அனுப்பும் கோப்புகளுக்கு கவர்னர் ஒப்புதல் அளிக்க வேண்டும். முக்கிய கோப்புகளில் அரசுடன் கருத்து வேறுபாடு ஏற்பட்டால் அதை ஜனாதிபதிக்கு கருத்தை கேட்க அனுப்பலாமே தவிர, கேள்வி கேட்கவும், அதிகாரிகளுக்கு உத்தரவு போடவும் கவர்னருக்கு அதிகாரம் இல்லை.

நீதிமன்றத் தீர்ப்பை மீறி செயல்படும் கவர்னர் மீது மேல் நடவடிக்கை எடுக்கப்படும். அவருக்கு துணை போகும் அதிகாரிகள் மீதும் நடவடிக்கை பாயும். அமைச்சர் மல்லாடி கிருஷ்ணராவ் மீதான தனிப்பட்ட முன்விரோதம் காரணமாக புதுச்சேரி அரசு மீது களங்கம் கற்பிக்க வேண்டும் என்ற நோக்கில் செயல்பட்டால் கடும் விளைவுகளை சந்திக்க நேரிடும்.இதேபோல் புதுச்சேரி சட்டம் ஒழுங்கு சீர்குலைய கவர்னர் காரணமாக இருக்கிறார். புதுச்சேரி மக்களுக்கு விரோதமாகவும், மக்களை வஞ்சிக்கும் வகையிலும் கவர்னர் செயல்படுவதை ஏற்க இயலாது என்றார்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X