இந்தியா

வங்கி கட்டடம் அருகில் திடீர் தீ விபத்து தீயணைப்பு வீரர் மயங்கி விழுந்ததால் பரபரப்பு

Added : ஜூன் 28, 2020
Share
Advertisement

புதுச்சேரி : தீ விபத்தின்போது ஆக்சிஜன் சிலிண்டர் காலியாகி, தீயணைப்பு வீரர் மயங்கி விழுந்ததால் பரபரப்பு நிலவியது.

புதுச்சேரி, புஸ்சி வீதி சின்னமணிகூண்டு அருகே இந்தியன் ஓவர்சீஸ் வங்கியின் பின்னால் உள்ள வீட்டில் வசிக்கும் குமார் யகயா,80 என்பவரின் வீட்டில் இருந்து நேற்றிரவு 7.30 மணிக்கு திடீரென கரும்புகை வந்தது. புகை, வங்கி கட்டடத்தையும் சூழ்ந்தது.சம்பவ இடத்திற்கு நிலைய அதிகாரி மனோகரன் தலைமையிலான தீயணைப்பு படையினர் விரைந்து வந்தனர். ஆனால், கரும்புகை சூழ்ந்திருந்ததால், தீயை அணைப்பதில் சிக்கல் ஏற்பட்டது. உடன் ஸ்மோக் எக்சியூட்டர் கருவியை வரவழைத்து கரும்புகை வெளியேற்றப்பட்டது.

பின்னர் ஆக்ஸிஜன் சிலிண்டர் அணிந்த வீரர்கள் வீட்டிற்குள் சென்று ஒரு மணி நேரம் போராடி தீயை அணைத்தனர்.தீயணைப்பு வீரர் மயக்கம்முன்னதாக தீயணைப்பு வீரர் அய்யப்பன் அணிந்து சென்ற சிலிண்டரில் ஆக்ஸிஜன் காலியானதால், மூச்சு திணறல் ஏற்பட்டு மயங்கி விழுந்தார். உடன் சக ஊழியர்கள் அவரை வெளியே கொண்டு வந்து உயிரை காப்பாற்றினர். சிலிண்டரில் ஆக்சிஜன் நிரப்பும் கருவி உள்ளது. இந்த கருவி பழுதாகி 6 மாதமாக சரி செய்யவில்லை. இதனால், அரைகுறையாக இருந்த ஆக்சிஜன் சிலிண்டரை அணிந்து தீயை அணைத்தவர் சிக்கலில் மாட்டியுள்ளார்.

இதேபோன்று, கரும்புகையை கொண்டு வரப்பட்ட 'ஸ்மோக் எக்சியூட்டர்' கருவி இயங்கி கொண்டிருந்தபோது திடீரென நின்றது. உடன், தீயணைப்பு வீரர்கள் பொதுமக்களிடம் பெட்ரோல் வாங்கி, மீண்டும் புகையை வெளியேற்றும் கருவியை இயக்கினர்.வங்கிக்கு பாதிப்பில்லை தீ வங்கியிலும் பரவியிருக்கலாம் என்ற அச்சம் நிலவியது. வங்கியை அதிகாரிகள் திறந்து ஆய்வு செய்ததில் எந்த பாதிப்பும் ஏற்படவில்லை என்பது உறுதிசெய்யப்பட்டது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X