இந்தியா

தி.மு.க., தலைமையில் போராட்டம்தெற்கு மாநில அமைப்பாளர் எச்சரிக்கை

Added : ஜூன் 28, 2020
Share
Advertisement

புதுச்சேரி : 'மக்கள் நடத்தும் போராட்டங்களுக்கு தி.மு.க., தலைமை தாங்கும்' என, தெற்கு மாநில தி.மு.க., அமைப்பாளர் சிவா எம்.எல்.ஏ., எச்சரித்துள்ளார்.

அவர் வெளியிட் டுள்ள அறிக்கை: வேலை இழந்து சம்பளம் இல்லாத அனைத்து அரசு ஊழியர்களுக்கும், அரசு சார்பு நிறுவன ஊழியர்களுக்கும், ரேஷன் கடை ஊழியர்களுக்கும், பொதுப்பணித் துறை ஊழியர்களுக்கும், அனைத்து கார்பரேஷன் ஊழியர்களுக்கும் சம்பளம் தர வேண்டும்.சிரமமான காலத்திலும் சிறப்பாக பணியாற்றும் நகராட்சி ஊழியர்களுக்கும், தேசிய கிராமப்புற சுகாதார இயக்கத்தின் கீழ் பணியாற்றும் டாக்டர்கள், செவிலியர்கள், ஏ.என்.எம்., ஆம்புலன்ஸ் ஓட்டுனர்கள் உள்ளிட்ட அனைவருக்கும் சம்பளத்தை வழங்க வேண்டும்.

இந்த மாதத்திலேயே தொடங்கி இந்த ஆட்சிக்காலம் முழுவதும் ஒவ்வொரு ரேஷன் கார்டுக்கும் தலா 30 கிலோ இலவச அரிசியை ரேஷன் கடைகள் மூலமாக வழங்க வேண்டும். 3 மாத காலத்திற்கு மேல் நீடித்து வரும் ஊரடங்கால் மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். எனவே, அனைத்து ரேஷன் கார்டுகளுக்கும் உடனடியாக மீண்டும் ரூ.2 ஆயிரம் வழங்க வேண்டும்.ஊரடங்கால் வேலையிழந்துள்ள ஆட்டோ, டெம்போ, பஸ் ஓட்டுனர்கள், சமையல் கலைஞர்கள், ஓட்டல், லாட்ஜ்களில் பணிபுரிபவர்கள், சலுான் வைத்துள்ளவர்கள், தியேட்டர் தொழிலாளர்கள், நெசவாளர்கள் உள்ளிட்ட அனைத்து விதமான வேலையில்லா தொழிலாளர்களுக்கும் தலா ரூ.10 ஆயிரம் நிவாரணம் வழங்க வேண்டும்.

இதுவரை காங்., ஆட்சியில் சொன்னதை செய்யாவிட்டாலும் நிதி சுமை மற்றும் கவர்னர் தலையீட்டை காரணம் காட்டியதைஏற்று ஆதரவு அளித்து வந்தோம். இனிமேலும் இதே நிலை நீடித்தால் புதுச்சேரி மக்கள் போராட்டங்களை மேற்கொள்வர். அந்த போராட்டங்கள் அனைத்திற்கும் தி.மு.க., தலைமை தாங்கும். தொடர்ந்து மக்கள் வஞ்சிக்கப்படுவதையும், ஏமாற்றப்படுவதையும் ஒருபோதும் பொறுத்து கொள்ள மாட்டோம். இவ்வாறு, அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X