இந்தியா

மின்மாற்றி மீது லாரி மோதல் வில்லியனுாரில் மின் தடை

Added : ஜூன் 28, 2020
Share
Advertisement

வில்லியனுார் : வில்லியனுாரில் மின்மாற்றி மீது லாரி மோதியதால் நான்கரை மணி நேரம் மின் தடை ஏற்பட்டது.

வில்லியனுார் கஸ்துாரி பாய் திருமண மண்டபத்தில் துப்புரவு தொழிலாளர் கள் அலுவலகம் இயங்கி வருகின்றது. அலுவலகம் எதிரே மெயின் ரோட்டில் சாலையோரத்தில் குப்பை வண்டி நிறுத்தி வைத்திருந்தனர்.இந்நிலையில் நேற்று பகல் 1.30 மணியளவில் கோட்டைமேடு பகுதியில் இருந்து வந்த அரியாங்குப்பம் பகுதியை சேர்ந்த டாரஸ் லாரி திடீரென சாலையோரம் நிறுத்தி வைத்திருந்த குப்பை வண்டி மீது வேகமாக மோதியது. இதனால் குப்பைவண்டி அருகே இருந்த டிரான்ஸ்பார்மர் கம்பத்திற்குள் புகுந்து சேதப்படுத்தியதால் மின்தடை ஏற்பட்டது.

தகவலறிந்த மின்துறை ஊழியர்கள் சம்பவ இடத்தை பார்வையிட்டு, விபத்து ஏற்படுத்திய லாரி மீது போலீசில் புகார் தெரிவித்தனர். போக்குவரத்து போலீசார் டிரான்ஸ்பார்மர் மீது மோதி நின்றிருந்த குப்பை வண்டி மற்றும் டாரஸ் லாரியை மீட்டு ஸ்டே ஷன் கொண்டு சென்றனர். தொடர்ந்து, நான்கு மணிநேரம் போராடி சேதமடைந்த மின்கம்பம் மற்றும் மின்மாற்றியை அகற்றிவிட்டு, தற்காலிகமாக மாற்று வழியில் மின் வியோகம் கொடுத்தனர். இதனால் வில்லியனுாரில் ஒரு பகுதியில் 4:30 மணி நேரம் மின்தடை ஏற்பட்டது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X