இந்தியா

வியாபாரிகளுக்கு குழு காப்பீடு திட்டம் ; மக்கள் நீதி மையம் கோரிக்கை

Added : ஜூன் 28, 2020
Share
Advertisement

புதுச்சேரி : வியாபாரிகளுக்கு குழு காப்பீடு திட்டம் அமல்படுத்த வேண்டும் என மக்கள் நீதி மையம் கோரிக்கை விடுத்துள்ளது.

அக்கட்சியின் மாநில தலைவர் எம்.ஏ.எஸ்.சுப்ரமணியன் விடுத்துள்ள அறிக்கை:புதுச்சேரி பெரிய மார்க்கெட்டில் சில தினங்களுக்கு முன் ஏற்பட்ட தீ விபத்தில், 5 கடைகள் எரிந்து சேதமடைந்தது.ஊரடங்கால் வியாபாரமின்றி பாதிக்கப்பட்டுள்ள நிலையில், தீ விபத்தில் முதலீடும் எரிந்து சேதமானதால் வியாபாரிகள் கடுமையான பாதிப்பிற்கு உள்ளாகியுள்ளனர். எனவே அவர்களுக்கு அரசு உடனடியாக நிவாரணம் வழங்க வேண்டும்.

வணிகர்களின் தொடர் போராட்டத்தால் கடந்த என்.ஆர்.காங்., ஆட்சியில் வணிக நல வாரியம் உருவாக்க ஆணை பிறப்பிக்கப்பட்டது. ஆனால் அதற்கு அடுத்த கட்டமாக நிதி ஒதுக்குவது, வாரிய நிர்வாகிகளை நியமிப்பது என்று எந்தப்பணியும் நடக்காததால், வணிக நல வாரியம் செயல்பாட்டிற்கு வரவில்லை.காங்., தி.மு.க. கூட்டணி அரசு அமைந்த முதல் ஆண்டில் வணிகர் நல வாரியம் செயல்பாட்டிற்கு வரும் என சட்டசபையில் அறிவிக்கப்பட்டது. வழக்கம்போல், அறிவிப்பு செயல்பாட்டிற்கு வரவில்லை.

எனவே, வணிக நலவாரியத்திற்கு நிதி ஒதுக்கி, நிர்வாகிகளை நியமித்து செயல்பாட்டிற்கு கொண்டுவர வேண்டும்.எதிர்காலத்தில் தீ விபத்து உள்ளிட்ட இயற்கை சீற்றங்களால் பாதிக்கப்படும் வியாபாரிகளுக்கு நிவாரணம் கிடைக்க குரூப் இன்சூரன்ஸ் திட்டத்தை அமல்படுத்த அரசு விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X