இந்தியா

2 குழந்தைகளுடன் ஆற்றில் குதித்த நிருபர்

Added : ஜூன் 28, 2020
Share
Advertisement

புதுச்சேரி : குடும்ப பிரச்னை காரணமாக, ஏனாமை சேர்ந்த நிருபர் தனது இரண்டு குழந்தைகளுடன் ஆற்றில் குதித்தார்.

புதுச்சேரி யூனியன் பிரதேசத்தின் ஒரு பகுதியான ஏனாமை சேர்ந்தவர் ஸ்ரீனிவாஸ். பத்திரிகையில் நிருபராக பணியாற்றி வருகிறது. இவரது மனைவி லாவண்யா. திருமணமாகி 6 ஆண்டாகும் இவர்க ளுக்கு 5 வயதில் ஆண்-பெண் இரட்டை குழந்தை உள்ளது. கணவன் - மனைவி இடையில் அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்ததால், ஸ்ரீனிவாஸ் வீட்டிற்கு செல்லாமல் இருந்தார்.இதுகுறித்து அவரது மனைவி லாவண்யா ஏனாம் போலீசில் புகார் செய்தார். ஸ்ரீனிவாசை அழைத்து விசாரித்த போலீசார், கவுன்சிலிங் அளித்து அனுப்பி வைத்தனர்.

வீட்டிற்கு சென்ற ஸ்ரீனிவாஸ், நேற்று தனது இரு குழந்தைகளையும் துாக்கி கொண்டு வீட்டிலிருந்து வௌியேறி, ஏனாம் அருகில் உள்ள பாலயோகி பாலத்திற்கு சென்று, குழந்தைகளுடன் கோதாவரி ஆற்றில் குதித்தார்.தகவல் அறிந்த ஏனாம் போலீசார், மீனவர்கள் மற்றும் தீயணைப்பு துறையினர் ஆற்றில் குதித்து தேடியதில் இரு குழந்தைகளின் உடல்கள் மீட்கப்பட்டது. ஸ்ரீனிவாஸ் உடலை தேடும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X