இந்தியா

கோவிட் மருத்துவமனை கொரோனா வார்டில்தலைமைச் செயலர், கலெக்டர் அதிரடி ஆய்வு

Added : ஜூன் 28, 2020
Share
Advertisement

புதுச்சேரி : கோவிட் மருத்துவமனையில் கொரோனா நோயாளிகள் சிகிச்சை பெறும் வார்டை, தலைமைச் செயலர், கலெக்டர் ஆகியோர் ஆய்வு நடத்தினர்.

புதுச்சேரி மாநிலத்தில் கொரோனா தொற்றை கட்டுப்படுத்துவதற்கு, பல்வேறு நடவடிக்கைகளை அரசு மேற்கொண்டுள்ளது. இருந்தபோதும், கொரோனா வைரஸ் பரவலின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.இந்நிலையில், தலைமைச் செயலர் அஸ்வனிகுமார், கலெக்டரும், சுகாதாரத் துறை செயலருமான அருண் ஆகியோர், கதிர்காமத்தில் உள்ள கோவிட் மருத்துவமனைக்கு நேற்று சென்றனர். பி.பி.இ., கிட் எனப்படும் பாதுகாப்பு ஆடைகளை அணிந்து கொண்ட தலைமைச் செயலரும், கலெக்டரும் கொரோனா தொற்றால் பாதித்தவர்கள் சிகிச்சை பெறும் வார்டுகளுக்கு நேரடியாக சென்று பார்வையிட்டனர்.

அங்கு அளிக்கப்படும் சிகிச்சை குறித்து டாக்டர்களிடம் கேட்டறிந்தனர். மேலும், நோயாளிகளுக்கு வழங்கப்படும் உணவு தரமானதாகவும், சத்தானதாகவும் உள்ளதா என்பது குறித்து ஆய்வு செய்தனர். மருத்துவமனையில் உள்ள வசதிகள், எதிர்கால தேவைகள் குறித்து அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினர்.கோவிட் மருத்துவமனை யில் பணியாற்றும் டாக்டர்கள், செவிலியர்கள் மற்றும் மருத்துவப் பணியாளர்களின் பணிகள் சிறப்பாக உள்ளதாக, தலைமைச் செய லர் அஸ்வனிகுமார், கலெக்டர் அருண் ஆகியோர் பாராட்டு தெரிவித்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X