இந்தியா

போலி ஹாலோகிராம் வழக்கு டிஸ்லரி உரிமையாளருக்கு முன்ஜாமின்

Added : ஜூன் 28, 2020
Share
Advertisement

புதுச்சேரி : போலி ஹாலோகிராம் வழக்கில் தேடப்பட்டு வந்த மதுபான ஆலை உரிமையாளருக்கு புதுச்சேரி நீதிமன்றம் முன்ஜாமின் வழங்கியது.

புதுச்சேரி, மங்கலம் கிராமத்தில் உள்ள பிரிமியர் மதுபான ஆலையில் மதுபாட்டில்கள் மீது போலி ஹாலோகிராம் ஸ்டிக்கர் ஒட்டி மோசடி செய்து வருவது கண்டுபிடிக்கப்பட்டு, ஆலைக்கு சீல் வைக்கப்பட்டது.இவ்வழக்கில் சி.பி.சி.ஐ.டி., போலீசாரால் மதுபான ஆலை பொதுமேலாளர் புன்னாராவ், வருவாய் ஆய்வாளர் அருண்பிரசாத் ஆகியோர் கைது செய்யப்பட்டு, ஜாமீனில் விடுவிக்கப்பட்டனர். மதுபான ஆலை உரிமையாளர் சேகரை தனிப்படை போலீசார் தேடிவந்தனர்.

இந்நிலையில் சேகர் முன்ஜாமின் கேட்டு, இரண்டாம் முறையாக நேற்று முன்தினம் மீண்டும் புதுச்சேரி நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்தார்.மனுவை விசாரித்த நீதிமன்றம், ஒரு மாதத்திற்குள் நீதிமன்றத்தில் சரணடைய வேண்டும். சனிக்கிழமை தோறும் சி.பி.சி.ஐ.டி., போலீசில் ஆஜராக வேண்டும். போலீஸ் அழைக்கும் போது விசாரணைக்கு வர வேண்டும் என்ற நிபந்தனையடன் முன் ஜாமின் வழங்கி உத்தரவிட்டது.

சி.பி.சி.ஐ.டி.,க்கு மாற்றம் : காட்டேரிக்குப்பம் ரவிக்குமார் மதுபான ஆலையில் நடந்த போலி ஹாலோகிராம் மோசடி குறித்து கலால் துறையினர் காட்டேரிக்குப்பம் போலீசில் புகார் அளித்தனர். அதன்பேரில் போலீசார், மதுபான ஆலை உரிமையாளர் ரவிக்குமார் மீது 8 பிரிவுகளில் வழக்கு பதிவு செய்தனர்.இந்நிலையில், இந்த மோசடியால் அரசுக்கு பல கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டிருக்கலாம் என்பதால், வழக்கை சி.பி.சி.ஐ.டி.,க்கு மாற்றம் செய்து டி.ஜி.பி. பாலாஜி ஸ்ரீவட்சா உத்தரவிட்டார். அதன்பேரில், சி.பி.சி.ஐ.டி போலீசார் மதுபான ஆலை உரிமையாளர் ரவிக்குமாரை தேடி வருகின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X