பொது செய்தி

இந்தியா

4.7 லட்சம் பி.சி.ஆர்., கருவிகள் டில்லிக்கு வழங்கியது ஐ.சி.எம்.ஆர்.,

Updated : ஜூன் 28, 2020 | Added : ஜூன் 28, 2020
Share
Advertisement

புதுடில்லி : 'கொரோனா' வைரஸ் பரிசோதனைகளுக்காக, 4.7 லட்சம் ஆர்.டி.,- பி.சி.ஆர்., கருவிகளை, இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில், டில்லி அரசுக்கு வழங்கியுள்ளது.



latest tamil news



டில்லியில், இங்கு, கொரோனா வைரஸ் பாதிப்பு, தொடர்ந்துஅதிகரித்து வருகிறது. இந்நிலையில், பாதிக்கப்பட்டோரை கண்டறிய உதவும் கருவிகளை, டில்லி அரசுக்கு, ஐ.சி.எம்.ஆர்., எனப்படும், இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் வழங்கியுள்ளது. இது குறித்து, மத்திய சுகாதாரத்துறை நேற்று வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது: கொரோனா வைரஸ் பரிசோதனைகளை மேற்கொள்ள, டில்லியில் உள்ள, 12 ஆய்வகங்களுக்கு, 4.7 லட்சம் ஆர்.டி.,- பி.சி.ஆர்., கருவிகளை, இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில், வழங்கியுள்ளது.


latest tamil news



இவை தவிர, திரவ மாதிரிகளை சேகரிப்பதற்கும், மாதிரிகளை ஆய்வகங்களுக்கு எடுத்துச் செல்வதற்கும், 2.84 லட்சம் வி.டி.எம்., கருவிகள் வினியோகிக்கப்பட்டு உள்ளன.டில்லியில், பாதிப்பு எண்ணிக்கை திடீரென அதிகரித்துள்ளதால், விரைவு பரிசோதனைகளுக்குஐ.சி.எம்.ஆர்., அனுமதி அளித்துள்ளது.அதோடு, 11.11 லட்சம், என்95 முகக் கவசங்களும், 44.8 லட்சம் 'ஹைட்ராக்சிக்ளோரோக்வின்' மாத்திரைகளும் வழங்கப்பட்டுள்ளன. இதைத்தவிர, 425 'வென்டிலேட்டர்'கள், டில்லி மருத்துவமனைகளுக்கு வினியோகிக்கப்பட்டுள்ளன.


latest tamil news



டி.ஆர்.டி.ஓ., எனப்படும், பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு மையத்தால், 1,000 படுக்கை வசதிகளுடன் உருவாக்கப்பட்ட பிரத்யேக மருத்துவமனையும், டில்லி அரசின் பயன்பாட்டிற்கு வழங்கப்பட்டுள்ளது. இதில், ராணுவத்தை சேர்ந்த மருத்துவர்கள் மற்றும் ஊழியர்கள் அடுத்த வாரம் முதல் பணியாற்ற உள்ளனர். கொரோனா வைரஸ் பரவலை தடுக்க, டில்லி அரசு எடுத்து வரும் நடவடிக்கைகளை கண்காணித்து வரும், மத்திய சுகாதாரத்துறையின், தேசிய நோய் கட்டுப்பாட்டு மையம், அவ்வப்போது சில வழிகாட்டுதல்களையும் வழங்கி வருகிறது. இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.

புதிய 'ஸ்டீராய்டு'க்கு அனுமதி : கொரோனா வைரசால் மிதமாகவும், மோசமாகவும் பாதிக்கப்பட்டிருக்கும் நோயாளிகளுக்கு அளிக்கப்படும் சிகிச்சைகளுடன் சேர்த்து, 'டெக்சாமெத்தசோன்' என்ற 'ஸ்டீராய்டு' மருந்தை, ஊசி மூலம் செலுத்த, மத்திய சுகாதாரத் துறை நேற்று அனுமதி வழங்கியுள்ளது. இதுவரை நோயாளிகளுக்கு செலுத்தப்பட்டுவந்த 'மெத்தில்பிரெட்னிசோலோன்' மருந்துக்கு மாற்றாக, டெக்சாமெத்தசோனை பயன்படுத்த அறிவுறுத்தப்பட்டுள்ளது. இம்மருந்தின் விலை, மிகவும் குறைவாகும்.

Advertisement




வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X