பஞ்சாலைகள் செயல்பட நிதி ஒதுக்க கோரிக்கை | Dinamalar

இந்தியா

பஞ்சாலைகள் செயல்பட நிதி ஒதுக்க கோரிக்கை

Added : ஜூன் 28, 2020
Share

புதுச்சேரி : மூடப்பட்டுள்ள அரசு பொதுத்துறை பஞ்சாலைகள் மற்றும் சர்க்கரை ஆலைகள் செயல்பட பட்ஜெட்டில் நிதி ஒதுக்க வேண்டும் என ஏ.ஐ.யு.டி.யு.சி., தொழிற் சங்கம் வலியுறுத்தியுள்ளது.

இதுகுறித்து, ஏ.ஐ.யு.டி.யு.சி., தொழிற்சங்க மாநில தலைவர் சங்கரன், செயலர் சிவக்குமார் ஆகியோர் முதல்வருக்கு அனுப்பியுள்ள கடிதம்:மூடப்பட்டுள்ள அரசு பொதுத்துறை பஞ்சாலைகள் மற்றும் சர்க்கரை ஆலைகள் செயல்படவும், தொழிலாளர்களுக்கு சேரவேண்டிய அனைத்து பாக்கி தொகைகளை பட்டுவாடா செய்யவும், நிதி ஒதுக்கிடு செய்ய வேண்டும். அரசு பொதுத்துறை நிறுவனங்கள், நகராட்சி பஞ்சாயத்து நிறுவனங்கள் கூட்டுறவு சங்கங்களின் நிலுவையில் உள்ள பாக்கி தொகைகளை பட்டுவாடா செய்ய நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டும்.

புதிய வேலைவாய்ப்புகளை உருவாக்க நிதி ஒதுக்கீடுகள் செய்ய வேண்டும். அமைப்பு சாரா தொழிலாளர்களுக்கு அறிவிக்கப்பட்ட தீபாவளி பரிசு தொகை, வாரிய அமைப்பை உருவாக்குதல் போன்ற திட்டங்களை அமல்படுத்த நிதி ஒதுக்கிடு செய்ய வேண்டும். .ஆந்திரா, தமிழகம் உள்ளிட்ட இதர மாநிலங்கள் போல கொரோனா நிதி வழங்கிடவேண்டும். இவ்வாறு கடிதத்தில் கூறப்பட்டுள்ளது.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X