பாரதியின் இசை அதிசயங்கள் நேரலை மூலம் சொற்பொழிவு| Dinamalar

இந்தியா

பாரதியின் இசை அதிசயங்கள் நேரலை மூலம் சொற்பொழிவு

Added : ஜூன் 28, 2020
Share

புதுச்சேரி : பாரதியின் இசை அதிசயங்கள் குறித்து நேரலை மூலம் சொற்பொழிவு நடந்தது.

மத்திய அரசின் கீழ் இயங்கி வரும் புதுச்சேரி மண்டல இந்திரா காந்தி தேசியக்கலை மையத்தின் சார்பில் 'பாரதியின் ஏழு அதிசயங்கள்' என்ற தலைப்பில் வெபினார் நேரலை மூலம் சொற்பொழிவு நடந்தது.புதுச்சேரி மண்டல இந்திரா காந்தி தேசியக்கலை மையத்தின் இயக்குனர் கோபால் வரவேற்றார். அரிமளம் பத்மநாபன், பாரதியின் பாடல்களை எடுத்து பாடி அதன் இசையமைப்பில் உள்ள சிறப்புகள் குறித்து பேசினார்.இந்திரா காந்தி தேசியக்கலை மையத்தின் உறுப்பினர் செயலர் சச்சிதானந்த ஜோசி சிறப்புரையாற்றினார். பேராசிரியர் ரமேஷ் கவுர் நோக்கவுரையாற்றினார்.சொற்பொழிவின் இறுதியில் பார்வையாளர்களின் கேள்விகளுக்கு விளக்கம் அளிக்கப்பட்டது. இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் இருந்தும் வெளிநாடுவாழ் இந்தியர்களும் இந்த ஆன்லைன் வெபினார் மூலம் பயன்பெற்றனர்.

ஏற்பாடுகளை புதுச்சேரி மண்டல இந்திரா காந்தி தேசிய மையம் ஏற்பாடு செய்திருந்தது.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X