பொது செய்தி

தமிழ்நாடு

அரசு மருத்துவக் கல்லூரி கட்டுமான பணி துவங்கியது

Added : ஜூன் 28, 2020
Share
Advertisement

கள்ளக்குறிச்சி : கள்ளக்குறிச்சி மாவட்ட அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனை கட்டுமான பணி துவங்க இரும்பு ஷீட்டினால் சுற்றுச்சுவர் அமைத்து மூடும் பணி நடந்தது.

கள்ளக்குறிச்சி அடுத்த சிறுவங்கூர் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லுாரிக்கு அருகே 20 ஏக்கர் காலி இடத்தில் அரசு மருத்துவகல்லுாரி கட்டுவதற்காக முதல் கட்டமாக நிலப்பரப்பை சமன் செய்து, அரசுக்கு சொந்தமான இடத்தின் எல்லையை கண்டறியும் பணி முடிவடைந்தது. தொடர்ந்து கட்டுமான பணிக்காக அளவீடு செய்யப்பட்டுள்ள நிலப்பகுதியைச் சுற்றி பாதுகாப்புக்காக இரும்பு ஷீட்டினால் தற்காலிக சுற்றுச்சுவர் அமைக்கும் பணி துவங்கி நடைபெற்று வருகிறது.

மேலும், கட்டுமான பணிக்காக புதிய கலவை இயந்திரங்கள் கொண்டு வரப்பட்டுள்ளன. சுற்றிலும் ஷீட் அமைக்கப்பட்ட பின்னர் பணிகள் துவங்கப்பட உள்ளது. பணிகள் நடைபெறும் இடத்திற்கு மண், ஜல்லி, கம்பி போன்ற பொருட்களை ஏற்றி வரும் கனரக வாகனங்கள் இலகுவாக வந்து செல்வதற்கு ஏற்ப ரோடுமாமாந்துார் - வாணியந்தல் வரை தார்சாலையை விரிவு படுத்தும் பணியும் நடைபெற்று வருகிறது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X