பொது செய்தி

தமிழ்நாடு

காட்டுவனஞ்சூரில் கால்நடை  மருத்துவ முகாம்

Added : ஜூன் 28, 2020
Share
Advertisement

சங்கராபுரம் : 'தினமலர்' செய்தி எதிரொலி காரணமாக காட்டு வனஞ்சூரில் கால்நடை மருத்துவ முகாம் நடந்தது.சங்கராபுரம் அடுத்த காட்டு வனஞ்சூரில் அதிக அளவில் கால்நடைகள் மடி நோயால் பாதிக்கப்பட்டுள்ளன.

இதுகுறித்து 'தினமலர்' நாளிதழில் செய்தி நேற்று வெளியானது. இதையொட்டி கள்ளக்குறிச்சி கால்நடை பராமரிப்புத் துறை உதவி இயக்குனர் பெரியசாமி உத்தரவின்பேரில்காட்டு வனஞ்சூரில் நேற்று கால்நடை மருத்துவ முகாம் நடந்தது.சங்கராபுரம் கால்நடை உதவி மருத்துவர் சுகுமார் தலைமையில் மருத்துவக் குழுவினர் 25 கால்நடைகளுக்கு சிகிச்சை அளித்தனர். மேலும் தோல் நோய்க்காக மூலிகை மருத்துவ சிகிச்சை முறை குறித்தும் கால்நடை வளர்ப்போருக்கு விளக்கினர்.முகாம் ஏற்பாடுகளை ராஜப்பா, சத்யராஜ் செய்திருந்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X