விதி மீறும் கடைகளுக்கு சீல் இன்ஸ்பெக்டர் எச்சரிக்கை| Dinamalar

சம்பவம் செய்தி

தமிழ்நாடு

விதி மீறும் கடைகளுக்கு சீல் இன்ஸ்பெக்டர் எச்சரிக்கை

Added : ஜூன் 28, 2020
Share

சங்கராபுரம் : சங்கராபுரத்தில் போலீசார், வியாபாரிகள் சங்க நிர்வாகிகள் பங்கேற்ற ஆலோசனைக் கூட்டம் நடந்தது.

அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் நடந்த கூட்டத்திற்கு, பேரூராட்சி செயல் அலுவலர் சம்பத்குமார் தலைமை தாங்கினார். அனைத்து வியாபாரிகள் சங்கத் தலைவர் ரவி, வணிகர் பேரவை மாவட்ட பொருளாளர் முத்துக்கருப்பன், குசேலன் மற்றும் மளிகை, பழக்கடை, ஜவுளி, நகைக்கடை, ஓட்டல், டீ கடை, இரு சக்கர வாகன பழுது பார்ப்போர் நல சங்கத்தினர் பங்கேற்றனர்.கூட்டத்தில், சங்கராபுரம் பகுதியில் கொரோனா தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.

வியாபாரிகள் கடைகளில் கட்டாயம் முகக்கவசம் அணிய வேண்டும். முகக் கவசம் அணியாமல் வருபவர்களுக்கு பொருட்கள் வழங்கக் கூடாது.கடைக்கு வருபவர்கள் சமூக இடைவெளியை பின்பற்ற வேண்டும். கடைகளின் முன்பு தண்ணீர் பக்கெட், சானிடைசர் வைக்க வேண்டும். காலை 7:00 மணிக்கு திறந்து மதியம் 3:00 மணிக்கு கடைகளை மூட வேண்டும். அரசின் விதிமுறைகளை பின்பற்றாத 25 கடைகள் காவல் துறை சார்பில் வீடியோ எடுக்கப்பட்டுள்ளது.கலெக்டர் உத்தரவின்படி அரசின் விதிமுறைகளை பின்பற்றாத கடைகள் சீல் வைக்கப்படும் என இன்ஸ்பெக்டர் திருமால் எச்சரித்தார்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X