சம்பவம் செய்தி

தமிழ்நாடு

இ-பாஸ் இன்றி வந்த 193 வாகனங்கள் பறிமுதல்

Added : ஜூன் 28, 2020
Share
Advertisement

உளுந்துார்பேட்டை : விழுப்புரம் மற்றும் கள்ளக்குறிச்சி மாவட்ட எல்லைப் பகுதிகளில் இ-பாஸ் இல்லாமல் வந்த 193 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக எஸ்.பி., ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.

கள்ளக்குறிச்சி மாவட்ட எல்லை பகுதியான மடப்பட்டு சோதனைச் சாவடியில் கள்ளக்குறிச்சி எஸ்.பி., (பொறுப்பு) ஜெயக்குமார் தலைமையில் உளுந்துார்பேட்டை உட்கோட்ட டி.எஸ்.பி., விஜயகுமார், திருநாவலுார் இன்ஸ்பெக்டர் விஜி மற்றும் அதிரடிப்படை போலீசார் திடீர் ஆய்வு செய்தனர்.அப்போது அந்த வழியாக வந்த கார் உள்ளிட்ட அனைத்து வாகனங்களுக்கும் இ-பாஸ் உள்ளதா என ஆய்வு செய்து, இ-பாஸ் இல்லாத வாகன ஓட்டிகள் மீது வழக்குப் பதிந்து, வாகனங்களை பறிமுதல் செய்தனர்.அப்போது எஸ்.பி., நிருபர்களிடம் கூறியதாவது:கொரோனா தொற்று பரவலைத் தடுக்கும் விதமாக வெளி மாவட்டங்களுக்கு வாகனங்களில் பயணிப்போர் முற்றிலும் தடை செய்யப்பட்டுள்ளது.

அத்தியாவசிய தேவைக்காக பயணிப்போர் இ-பாஸ் அனுமதி பெற்று பயணிக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.இதை மீறியும், முகக் கவசம் இல்லாமலும் கடந்த 5 நாட்களில், பயணித்த 116 இரு சக்கர வாகனங்கள், 57 நான்கு சக்கர வாகனங்கள், 20 ஆட்டோக்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இந்த வாகனங்களை ஓட்டி வந்தோர் மீது வழக்குப்பதிவும் செய்யப் பட்டுள்ளது. இதில், விழுப்புரம் மாவட்டத்தில் 13 சோதனைச் சாவடிகளிலும், கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் 6 சோதனைச் சாவடிகளிலும் தீவிர வாகன தணிக்கை செய்யப்பட்டு கண்காணிக்கப் படுகிறது. இ-பாஸ் இல்லாமல் தேவையின்றி பயணிக்கும் வாகன ஓட்டிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படுவதோடு, வாகனங்கள் பறிமுதல் செய்யப்படும்.இவ்வாறு எஸ்.பி., ஜெயக்குமார் கூறினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X