சம்பவம் செய்தி

தமிழ்நாடு

கள்ளக்குறிச்சி போலீஸ் நிலையம் முன் தடுப்பு

Added : ஜூன் 28, 2020
Share
Advertisement

கள்ளக்குறிச்சி : கள்ளக்குறிச்சியில் 14க்கும் மேற்பட்ட போலீசாருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டதால், போலீஸ் நிலையம் முன் தற்காலிகமாக தடுப்பு அமைக்கப்பட்டுள்ளது.




கள்ளக்குறிச்சியில் பணிபுரியும் போலீசாருக்கு நாளுக்கு நாள் கொரோனா தொற்று அதிகரித்து வருகிறது. இதில் சங்கராபுரம் சாலையில் உள்ள சட்டம் மற்றும் ஒழுங்கு பிரிவில் பணிபுரியும் சப் இன்ஸ்பெக்டர் உட்பட 14க்கும் மேற்பட்டோருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இவர்கள் தச்சூரில் உள்ள தனியார் கல்லுாரியில் தனிமைபடுத்தப்பட்டுள்ளனர்.தகராறு, திருட்டு போன்ற பல்வேறு பிரச்னைகளுக்கு புகார் அளிக்க பொதுமக்கள் கூட்டமாக போலீஸ் நிலையம் வருகின்றனர்.



எனவே, பொதுமக்கள் கூட்டமாக வருவதைத் தவிர்க்க போலீஸ் நிலையம் முன் ரிப்ளக்டர் கூம்புகள் மற்றும் ஏணியை வைத்தும் தற்காலிகமாக தடுப்பு ஏற்படுத்தியுள்ளனர்.மேலும், பொதுமக்களின் வீண் அலைச்சலைத் தவிர்க்க வரவேற்பாளர் பகுதியில் உள்ளவர்களிடம் புகார் கொடுக்கலாம் எனவும், புகார் கொடுக்க 2 பேர் மட்டுமே வரவேண்டும், முக்கிய பிரச்னைகளுக்கு உடனடி தீர்வு காண நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் சப் இன்ஸ்பெக்டர் செல்வநாயகம் தெரிவித்துள்ளார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X