சம்பவம் செய்தி

தமிழ்நாடு

குழந்தைகளோடு பெண் தர்ணா

Added : ஜூன் 28, 2020
Share
Advertisement

உளுந்துார்பேட்டை : உளுந்துார்பேட்டையில் குடும்ப பிரச்னையால், குழந்தைகளோடு பெண் சாலையில் அமர்ந்து தர்ணாவில் ஈடுபட்டார்.

உளுந்துார்பேட்டை அடுத்த கூவாடு கிராமத்தைச் சேர்ந்தவர் வள்ளிகந்தன். இவரது மனைவி அபிராமி, 24; இவர்களுக்கு தீபா, 3; மற்றும் பெண் கைக்குழந்தை உள்ளது. கணவன், மனைவிக் கிடையே குடும்பத் தகராறு ஏற்பட்டுள்ளது.இதனையறிந்த அபிராமியின் சகோதரர்கள் வள்ளிகந்தனை கேட்ட போது தகராறு ஏற்பட்டது. இதனை தடுத்த வள்ளிகந்தன் தாய் இருசாயி தாக்கப்பட்டார். இதுகுறித்து இருசாயி உளுந்துார்பேட்டை போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார்.அதன் பேரில், போலீசார் அபிராமியின் சகோதரரை நேற்று, விசாரணைக்கு அழைத்துச் சென்றனர்.

இதனை கண்டித்து அபிராமி, தனது கணவர் மற்றும் அவரது குடும்பத்தார் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி போலீஸ் நிலையம் முன் தனது குழந்தைகளோடு மாலை 6:20 மணிக்கு அமர்ந்து தர்ணாவில் ஈடுபட்டார்.இன்ஸ்பெக்டர் எழிலரசி மற்றும் போலீசார் அவரை சமாதானம் செய்து, 6:30 மணிக்கு அனுப்பி வைத்தனர். இதனால், அங்கு சிறிது நேரம் பரபரப்புநிலவியது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X