சம்பவம் செய்தி

தமிழ்நாடு

கொரோனா பரிசோதனை செய்யக்கோரிபோக்குவரத்துக் கழக ஊழியர்கள் மனு

Added : ஜூன் 28, 2020
Share
Advertisement

கள்ளக்குறிச்சி ; கள்ளக்குறிச்சி அரசு போக்குவரத்துக்கழக பணிமனையில் ஊழியர்களுக்கு கொரோனா பரிசோதனை செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கலெக்டர் அலுவலகத்தில் நேற்று மனு அளித்தனர்.

கள்ளக்குறிச்சி போக்குவரத்துக் கழகத்தில் பணிபுரியும் டிரைவர் மற்றும் கண்டக்டர்கள் அளித்துள்ள மனு:கள்ளக்குறிச்சியில் இரண்டு பணி மனைகள் உள்ளன. அரசு உத்தரவுப்படி பொதுமக்கள் பயன்பாட்டிற்காக பஸ் இயக்கிக் கொண்டிருக்கிறோம். இந்நிலையில் கடந்த 16ம் தேதி பணியில் இருந்த கண்டக்டர் ஒருவருக்கு உடல் நலக் குறைவு ஏற்பட்டது. பரிசோதனைக்காக கள்ளக்குறிச்சி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.எனவே, அரசு போக்குவரத்துக் கழகத்தில் பணிபுரியும் அனைவருக்கும் கொரோனா பரிசோதனை செய்வதுடன், பணி பாதுகாப்பு வழங்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X