திருக்கோவிலுார் பகுதிகளில் 4:00 மணிக்கு கடைகள் அடைப்பு| Dinamalar

சம்பவம் செய்தி

தமிழ்நாடு

திருக்கோவிலுார் பகுதிகளில் 4:00 மணிக்கு கடைகள் அடைப்பு

Added : ஜூன் 28, 2020
Share

திருக்கோவிலுார் : கொரோனா அச்சத்தால் திருக்கோவிலுாரில் வியாபாரிகள் 4:00 மணிக்கு அனைத்து கடைகளையும் மூடினர்.

திருக்கோவிலுார் மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் கொரோனா பரவல் கடந்த 10 நாட்களுக்கு முன்பு அதிகரிக்கத் துவங்கியது. இதன் காரணமாக வியாபாரிகள் காலை 6:00 மணி முதல், மாலை 3:00 மணி வரை மட்டுமே கடைகளை திறப்பது என முடிவு செய்தனர்.வணிகர் சங்கங்கள் சார்பில் மேற்கொள்ளப்பட்ட இந்த நடைமுறையில் சிறிது சிறிதாக தளர்வு ஏற்பட்டது. இதன் காரணமாக மாலை 5:00 மணியை கடந்தும் கடைகள் திறக்கப்பட்டு இருந்தது. இந்நிலையில், திருக்கோவிலுார் தாலுகாவில் 55 பேர் வரை தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதால், அச்சமடைந்த வியாபாரிகள் நேற்று முதல் 4:00 மணிக்கு கடைகளை மூடத் துவங்கினர். கொரோனா பரவல் அதிகரித்திருப்பதால் வியாபாரிகளும், பொதுமக்களும் சுய கட்டுப்பாடுகளை பின்பற்ற வேண்டும் என போலீசார் கேட்டுக் கொண்டுள்ளனர்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X