சம்பவம் செய்தி

தமிழ்நாடு

மக்கள் நடமாட்டம் அதிகரிப்பு தொற்று வேகமாக பரவும் அபாயம்

Added : ஜூன் 28, 2020
Share
Advertisement

தியாகதுருகம் : தியாகதுருத்தில் நாளுக்கு நாள் மக்கள் நடமாட்டம் அதிகரித்து வருவதால் தொற்று வேகமாக பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

கள்ளக்குறிச்சி நகரில் கொரோனோ தொற்று பாதிப்பு அதிகரித்ததைத் தொடர்ந்து முக்கிய கடைவீதி சாலை மூடப்பட்டன. இதனால் கள்ளக்குறிச்சி நகருக்குச் சென்று அத்தியாவசிய பொருட்கள் வாங்க முடியாத நிலை ஏற்பட்டது.இதனால், தியாகதுருகம் நகரில் பொருட்களை வாங்க பொதுமக்கள் கூடுவது நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. நெருக்கடி மிகுந்த குறுகிய சாலையில் மக்களின் நடமாட்டம் அதிகமாக உள்ளதால் தொற்று வேகமாக பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது.சாலையோரங்களில் நிறுத்தப்படும் வாகனங்களால் மக்கள் ஒதுங்கி நடக்க வழியின்றி சிரமப்படுகின்றனர்.

அதேபோல் இருசக்கர வாகனங்கள் அதிகளவில் செல்வதால் மக்கள் சமூக இடைவெளியை கடைபிடிக்க முடியாமல் தியாகதுருகம் நகரம் திணறுகிறது.நாளுக்கு நாள் கொரோனா தொற்று அதிகரித்து வரும் நிலையில் நகரில் அதிகளவில் மக்கள் கூட்டம் அலைமோதுவது நோய் பரப்பும் மையமாக மாறும் அபாயம் உள்ளது. அதேபோன்று முகக் கவசம் அணியாமல் பலரும் சுற்றித்திரிகின்றனர். மக்கள் அதிகம் கூடும் இடங்களை அதிகாரிகள் கண்காணித்து ஒழுங்குபடுத்தி அத்து மீறுபவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X