பொது செய்தி

தமிழ்நாடு

ஒருவருக்காக வந்த சிறப்பு விமானம்

Updated : ஜூன் 28, 2020 | Added : ஜூன் 28, 2020 | கருத்துகள் (13)
Share
Advertisement
special plane, for single person, chennai, kolkatta, singapore, tamil nadu, tn news, vande bharat mission, flights, passengers, central government, சிறப்பு விமானம், சென்னை, கோல்கட்டா, சிங்கப்பூர், ஒருவருக்காக

சென்னை: சிங்கப்பூரில் இருந்து, கோல்கட்டா வழியாக, சென்னைக்கு வந்த சிறப்பு விமானத்தில், ஒரே ஒரு பயணி மட்டுமே வந்தார்.

மத்திய அரசு, வெளிநாடுகளில் சிக்கித் தவித்து வரும் இந்தியர்களை அழைத்து வர, சிறப்பு விமானங்களை இயக்கி வருகிறது. அதன்படி, சிங்கப்பூரில் இருந்து, மேற்கு வங்கம் மாநிலம், கோல்கட்டா வழியாக, நேற்று முன்தினம் இரவு, 10:30 மணிக்கு, சிறப்பு விமானம் சென்னை வந்தது.அந்த விமானம் வந்து நின்றதும், பயணியர் இறங்கிச் செல்ல, 'ஏரோபிரிட்ஜ்' எனப்படும் தானியங்கி நடைமேடை, விமானத்துடன் இணைக்கப்பட்டு, விமானத்தின் கதவுகள் திறக்கப்பட்டன. விமான நிலைய அதிகாரிகள், அந்த விமானத்தில் வந்த பயணியரை வரவேற்க தயாராகினர்.


latest tamil news



ஆனால், அந்த விமானத்தில் இருந்து, சென்னையைச் சேர்ந்த, 40 வயது மதிக்கத்தக்க, ஒரு பயணி மட்டுமே வெளியே வந்தார். இதனால், விமான நிலைய அதிகாரிகள் குழப்பத்தில் ஆழ்ந்தனர். அந்த நபரிடம் விசாரித்த போது, 'சிங்கப்பூரில் இருந்து, 145 பேர், இந்த விமானத்தில் பயணித்தோம். கோல்கட்டாவில், 144 பேர் இறங்கி விட்டனர். நான் மட்டும் தனியாக, சென்னைக்கு வந்தேன்' என்றார்.

Advertisement




வாசகர் கருத்து (13)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
மலரின் மகள் - EDINBURGH,யுனைடெட் கிங்டம்
29-ஜூன்-202017:41:02 IST Report Abuse
மலரின் மகள் தமிழிகத்திற்கு வருவதும் மிகவும் கடினம். கருத்து தெரிவிக்கும் மக்களும் சரி அரசும் சரி, விமானங்கள் தமிழகத்திற்கு இயக்கப்படக்கூடாது என்று தேவையற்று பயபப்டுவதுடன் தவறிழைக்கிறார்கள். எல்லோருக்கும் அவசர நிச்சய தேவைகள் இருக்கும் போக்குவரத்தை முடக்குவதுடன் மாற்று எப்பாடுகள் கிடையாது என்று சொல்வதால் வரும் பிரச்சினைகள் தான் கொரானாவை விட பெரிது அதை உச்சத்திற்கு கொண்டு செல்லவும் செய்கிறது.
Rate this:
Cancel
J.V. Iyer - Singapore,சிங்கப்பூர்
29-ஜூன்-202004:14:52 IST Report Abuse
J.V. Iyer பாவம் பயந்துபோய் இருப்பார்.
Rate this:
Cancel
Vena Suna - Coimbatore,இந்தியா
28-ஜூன்-202014:28:06 IST Report Abuse
Vena Suna அவர் தனியாக வரவில்லை...கொரோனாவும் கூட வந்திருக்கும்
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X