பொது செய்தி

தமிழ்நாடு

3 நாட்கள் கடை மூட முடிவு மீன் விற்பனைக்கும் தடை

Added : ஜூன் 28, 2020
Share
Advertisement

பழவேற்காடு : தொற்று பரவலை கட்டுப்படுத்தும் வகையில், பழவேற்காடில், வாரத்தில், மூன்று நாட்கள் கடைகளை மூடவும், மீன் விற்பனைக்கு தடை விதிக்கவும், ஊராட்சி கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டு உள்ளது.

பழவேற்காடு மார்க்கெட் பகுதியில், மீன், பழம், காய்கறி மற்றும் மளிகை கடைகள் இயங்கி வருகின்றன. இங்கு தினமும், ஆயிரக்கணக்கான மக்கள் வந்து செல்கின்றனர்.இதனால், எந்த நேரமும் கூட்ட நெரிசலுடன் காணப்படும் பழவேற்காடு மார்க்கெட் பகுதியில், கொரோனா தொற்று பரவக்கூடிய அபாயம் இருக்கிறது.அதை கட்டுப்படுத்தும் வகையில், நேற்றுமுன்தினம், பழவேற்காடு ஊராட்சி மன்ற தலைவர் மாலதி தலைமையில், ஆலோசனை கூட்டம் நடந்தது.

கூட்டத்தின் முடிவில், வாரத்தில், புதன், சனி, ஞாயிறு ஆகிய மூன்று நாட்கள், பழவேற்காடு மார்க்கெட்டில் அனைத்து கடைகளையும் மூடுவது.மீன் மார்க்கெட் விற்பனைக்கு தடை விதிப்பது; முக கவசம் இன்றி நடமாடுவர்கள் மீது நடவடிக்கை எடுப்பது என, முடிவு எடுக்கப்பட்டது.இது தொடர்பாக, தீர்மானம் நிறைவேற்றப்பட்டு, வியாபாரிகள் மற்றும் பொதுமக்களுக்கு தெரிவிக்கப்பட்டது. இந்த நடைமுறை, வரும், ஜூலை, 1ம் தேதியில் இருந்து, செயல்பாட்டிற்கு வரும் எனவும் அறிவுறுத்தப்பட்டது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X