சம்பவம் செய்தி

தமிழ்நாடு

ரூ.10 லட்சம் மதுபாட்டில்கள் பறிமுதல்

Added : ஜூன் 28, 2020
Share
Advertisement

வேப்பம்பட்டு : வேப்பம்பட்டு பகுதியில், அரசு மதுபான பாரில், 10 லட்ச மதிப்பிலான, 4,344 மதுபான பாட்டில்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.

சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு ஆகிய நான்கு மாவட்டங்களில், 5வது கட்டமாக முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது.இந்நிலையில், சென்னையை தவிர்த்து மற்ற மாவட்டங்களில், அரசு மதுபான கடைகள் செயல்பட்டு வருகிறது.இதையடுத்து, திருவள்ளூர் அடுத்த, வேப்பம்பட்டு பகுதியில, அரசு மதுபான பாரில் கள்ளத்தனமாக மதுபாட்டில்கள் விற்பனை செய்யப்படுவதாக, எஸ்.பி., அரவிந்தனுக்கு தகவல் கிடைத்தது.

அதன்படி, எஸ்.பி., அரவிந்தன் உத்தரவின்பேரில், மதுவிலக்கு டி.எஸ்.பி., கல்பனாதத் மேற்பார்வையில், மதுவிலக்கு தனிப்படை போலீசார், வேப்பம்பட்டு பகுதியில் அதிரடி சோதனை மேற்கொண்டனர்.அப்போது, அரசு மதுபான பாரில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 4,344 குவார்ட்டர் மதுபாட்டில்களை தனிப்படை போலீசார் பறிமுதல் செய்தனர்.இதன் மதிப்பு, 10 லட்சம் ரூபாய் என, போலீசார் தெரிவித்தனர்.

மேலும், அரசு மதுபான பாரில், கள்ளத்தனமாக மதுபான பாட்டில்கள் விற்பனையில் ஈடுபட்ட, சென்னை, அண்ணா நகரைச் சேர்ந்த தாணு, 42, என்பவர் மீது வழக்கு பதிந்து தேடி வருவதாகவும் மதுவிலக்கு போலீசார் தெரிவித்தனர். அவரை பிடித்தால் தான், 4,344 மதுபாட்டில்கள் எப்படி கிடைத்தது குறித்து தெரிய வரும் என போலீசார் கூறினர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X