பொது செய்தி

தமிழ்நாடு

இந்து காந்தம் கஷாயம் வழங்கல்

Added : ஜூன் 28, 2020
Share
Advertisement

உத்திரமேரூர் : கொரோனா வைரஸ் தடுப்பு பணியில் ஈடுபட்டு வரும், துாய்மை பணியாளர்களுக்கு, நோய் எதிர்ப்பு சக்தி மருந்தான இந்து காந்தம் கஷாயம், சாலவாக்கத்தில் நேற்று வழங்கப்பட்டது.

கொரோனா தொற்று ஏற்படுவதை தடுக்க, ஆயுர்வேத நோய் எதிர்ப்பு சக்தி மருந்து உட்கொள்ளலாம் என, அரசு அனுமதி அளித்துள்ளது.அதன்படி, சென்னை ஸ்ரீஹரீயம் ஆயுர்வேதா கிளினிக் மற்றும் செங்கல்பட்டு போதி தர்மர் ஆயுர்வேதா கிளினிக் சார்பில், சாலவாக்கத்தில் உள்ள துாய்மை பணியாளர்கள், 40 பேருக்கு, நேற்று, இந்து காந்தம் கஷாயம் வழங்கப்பட்டது.

ஆயுர்வேத மருத்துவர்கள் சுதிர் அய்யப்பன், தாமரை மணாளன் ஆகியோர் தெரிவித்ததாவது:ஊரடங்கு காலத்திலும், துாய்மை பணியாளர்கள் கிருமி நாசினி தெளிப்பு, கொசு மருந்து அடிப்பு, பிளீச்சிங் பவுடர் துாவுதல் என, கொரோனா தடுப்பு பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.இப்பணியாளர்களுக்கு நோய் எதிர்ப்பு சக்தி கிடைக்கும் வகையில், இந்து காந்தம் கஷாயம் வழங்க முடிவு செய்து, தினமும் வழங்கி வருகிறோம்.இவ்வாறு, அவர் கூறினர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X