சம்பவம் செய்தி

தமிழ்நாடு

ஆய்வாளருக்கு கொரோனா

Added : ஜூன் 28, 2020
Share
Advertisement

திருத்தணி : திருத்தணி நகராட்சி அலுவலகத்தில் பணிபுரியும், துாய்மை ஆய்வாளருக்கு, கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதால் அலுவலகத்திற்கு, இரு நாட்கள் மட்டும் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

திருத்தணி நகராட்சியில் நாளுக்கு நாள் கொரோனாவின் தாக்கம் அதிகரித்து வருகிறது. நேற்று வரை, 29 பேர், கொரோனாவால் பாதிக்கப்பட்டு உள்ளனர். இந்நிலையில், திருத்தணி நகராட்சி அலுவலகத்தில் பணிபுரியும் துாய்மை ஆய்வாளருக்கும், நேற்று, கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.இதனால், அலுவலகத்திற்கு, நேற்றும், இன்றும் விடுமுறை அளிக்கப்பட்டு உள்ளது. கொரோனாவால் பாதிக்கப்பட்ட துாய்மை ஆய்வாளர் காய்ச்சல் இருந்ததால், ஒரு வாரமாக அலுவலகத்திற்கு வராமல் வீட்டிலேயே தனிமைப்படுத்திக் கொண்டு பணிகளை கவனித்து வந்தார்.வரும், திங்கட்கிழமை முதல் வழக்கம் போல் நகராட்சி அலுவலகம் செயல்படும் என, ஆணையர் பாலசுப்ரமணியம் தெரிவித்தார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X