கொரோனா தடுப்பு நடவடிக்கையில் நகராட்சி நிர்வாகங்கள் மெத்தனம்| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

கொரோனா தடுப்பு நடவடிக்கையில் நகராட்சி நிர்வாகங்கள் மெத்தனம்

Added : ஜூன் 28, 2020
Share
செங்கல்பட்டு : செங்கல்பட்டு மாவட்டத்தில், கொரோனா தொற்று முன்னெச்சரிக்கை நடவடிக்கையில், மாவட்ட நிர்வாகம் பல்வேறு நடவடிக்கை எடுத்து வருகிறது.எனினும், செங்கல்பட்டு, மறைமலை நகர், தாம்பரம், செம்பாக்கம், பல்லாவரம், அனகாபுத்துார், பம்மல் ஆகிய நகராட்சி பகுதிகளில், தினமும் தொற்று அதிகரித்து வருகிறது.தொற்றை கட்டுப்படுத்த, நகராட்சி சுகாதார ஊழியர்கள் மற்றும் தற்காலிக

செங்கல்பட்டு : செங்கல்பட்டு மாவட்டத்தில், கொரோனா தொற்று முன்னெச்சரிக்கை நடவடிக்கையில், மாவட்ட நிர்வாகம் பல்வேறு நடவடிக்கை எடுத்து வருகிறது.எனினும், செங்கல்பட்டு, மறைமலை நகர், தாம்பரம், செம்பாக்கம், பல்லாவரம், அனகாபுத்துார், பம்மல் ஆகிய நகராட்சி பகுதிகளில், தினமும் தொற்று அதிகரித்து வருகிறது.

தொற்றை கட்டுப்படுத்த, நகராட்சி சுகாதார ஊழியர்கள் மற்றும் தற்காலிக ஊழியர்கள், வீடு வீடாக சென்று, பரிசோதனை செய்கின்றனர்.காய்ச்சல், இருமல், சளி என, பாதிக்கப்பட்டோரின் விபரங்களை, நகராட்சிக்கு தருகின்றனர். இந்த விபரங்களை பெறும் நகராட்சி அலுவலர்கள், இதற்கடுத்த நடவடிக்கையில் ஈடுபடுவதில்லை என, குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

இது குறித்து, சமூக ஆர்வலர்கள் கூறியதாவதுதொற்று பாதிக்கப்பட்ட பகுதிகளில், கிருமிநாசனி தெளிப்பது, வீடு வீடாக சென்று பரிசோதனை செய்வது உள்ளிட்ட பணிகளில் ஈடுபடுவதில்லை. மார்க்கெட் பகுதிகளில், மக்கள், கடைக்காரர்கள், முக கவசம் அணியாமல் செல்வதையும் அதிகாரிகள் கண்டுகொள்வதில்லை.எனவே, நகராட்சி பகுதிகளில், தொற்றை கட்டுப்படுத்த, மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு, அவர்கள் கூறினர்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X