சம்பவம் செய்தி

தமிழ்நாடு

கஞ்சா கடத்திய மூன்று பேர் கைது

Added : ஜூன் 28, 2020
Share
Advertisement

சோழவரம்: சோழவரம் அருகே, இருசக்கர வாகனத்தில், கஞ்சா கடத்தி வந்த, மூன்று பேரை போலீசார் கைது செய்தனர்.

சோழவரம் அடுத்த, காந்தி நகர் பகுதியில், நேற்று முன்தினம் இரவு, போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது, அவ்வழியே பஜாஜ் பல்சர் இருசக்கர வாகனத்தில் வந்த, மூன்று பேரை மடக்கி விசாரணை மேற்கொண்டனர்.சந்தேகத்தில் அவர்களை சோதனையிட்ட போது, 2 கிலோ கஞ்சா பொட்டலங்கள் இருப்பதை கண்டனர்.தொடர் விசாரணையில் அவர்கள், சென்னை, வில்லிவாக்கம் பகுதியை சேர்ந்த மணிகண்டன், 21, சதீஷ்குமார், 19, ஆவடியை பொன்ராஜ், 18, என்பதும், ஆந்திராவில் இருந்து கஞ்சா கடத்தி வந்ததும் தெரிந்தது.அதை தொடர்ந்து போலீசார் மூவரையும் கைது செய்து, அவர்களிடம் இருந்த, 2 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X