காங்கிரஸ் செயற்குழு தேர்தல் வந்தால் போட்டியிடுவேன்| Dinamalar

'காங்கிரஸ் செயற்குழு தேர்தல் வந்தால் போட்டியிடுவேன்'

Added : ஜூன் 28, 2020 | கருத்துகள் (2)
Share
 'காங்கிரஸ் செயற்குழு தேர்தல் வந்தால் போட்டியிடுவேன்'

புதுடில்லி: ''காங்கிரஸ் செயற்குழுவுக்கு தேர்தல் நடத்தப்பட்டால், நிச்சயம் போட்டியிடுவேன்,'' என, கட்சியின் மூத்த தலைவர், சஞ்சய் ஜா தெரிவித்துள்ளார்.

காங்கிரஸ் கட்சியின் செய்தி தொடர்பாளராக இருந்தவர், சஞ்சய் ஜா. மஹாராஷ்டிர மாநிலத்தை சேர்ந்த இவர், சமீபத்தில், ஆங்கில நாளிதழ் ஒன்றில், கட்டுரை எழுதிஇருந்தார்.அதில், 'காங்கிரஸ் கட்சி நடவடிக்கைகளை சீர் செய்வதில், அசாதாரண மந்தநிலை மற்றும் குழப்பம் நிலவுகிறது.

'இதை உணர முடியாத தலைவர்கள் பலர், கட்சியில் முக்கிய பொறுப்புகளில் உள்ளனர். காந்திய சிந்தனை மற்றும் நேருவின் கண்ணோட்டத்தை உயிர் மூச்சாக கொண்டுள்ள என்னை போன்றவர்களுக்கு, கட்சி சிதைந்து வருவது அதிர்ச்சியளிக்கிறது' என, கூறியிருந்தார். அவரின் இந்த கட்டுரை, பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இதையடுத்து, செய்தி தொடர்பாளர் பொறுப்பிலிருந்து சஞ்சய் ஜாவை நீக்கி, கட்சி தலைவர், சோனியா உத்தரவிட்டார்.

இதற்கிடையே, காங்கிரஸ் தலைவராக, ராகுல் மீண்டும் பொறுப்பேற்க வேண்டும் என, கட்சியில் ஒரு பிரிவினர் வலியுறுத்தி வருகின்றனர். இதனால், கட்சி தலைவர் பொறுப்பை, ராகுல் விரைவில் ஏற்பார் என, எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில், சஞ்சய் ஜா கூறியதாவது:காங்கிரஸ் கட்சியின் செயற்குழு தேர்தல் எப்போது நடந்தாலும், அதில் நான் போட்டியிடுவேன். இதில், எந்த சந்தேகமும் இல்லை. நேருவின் கொள்கைகளை உறுதியாக கடைப்பிடிக்கும் நான், கட்சியை வலுவடைய செய்வதில் முக்கிய பங்கு வகிப்பேன். பா.ஜ.,வுக்கு எதிராக, கட்சியை பலமாக்குவேன்.இவ்வாறு, அவர் கூறினார்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X