செங்கையில் 7 பேர் இறப்பு: 248 பேருக்கு கொரோனா| Dinamalar

தமிழ்நாடு

செங்கையில் 7 பேர் இறப்பு: 248 பேருக்கு கொரோனா

Added : ஜூன் 28, 2020
Share

செங்கல்பட்டு: செங்கல்பட்டு மாவட்டத்தில், நேற்று ஒரே நாளில், 248 பேருக்கு, கொரோனா தொற்று உறுதி செய்யபட்டது. ஏழு பேர் இறந்தனர்.

செங்கல்பட்டு மாவட்டம், திருக்கழுக்குன்றம் பகுதியைச் சேர்ந்த, 50 வயது ஆண், செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில், கொரோனாவுக்கு சிகிச்சை பெற்ற நிலையில், நேற்று இறந்தார்.மேலும், சென்னையில் தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வந்த, ஆறு பேர் இறந்தனர். இதுவரை, மொத்தம், 75 பேர் இறந்துள்ளனர்.

தாம்பரம் - 68, செங்கல்பட்டு - 63, பல்லாவரம் - 53, வண்டலுார் - 26, திருக்கழுக்குன்றம் - 15, திருப்போரூர் - 14, மதுராந்தகம் - ஒன்பது என, 248 பேர், நேற்று, புதிதாக பாதிக்கப்பட்டு உள்ளனர். தவிர, பிற மாவட்டங்களைச் சேர்ந்த நான்குபேர் என, மொத்த பாதிப்பு, 4,911 ஆக உயர்ந்துள்ளது.

திருவள்ளூரில் 146

திருவள்ளூர் மாவட்டத்தில், கொரோனா தொற்று, நேற்று முன்தினம், 3,266ஆக இருந்தது. நேற்று, 146 பேருக்கு கொரோனா தொற்று உறுதியான நிலையில், பாதிப்பு எண்ணிக்கை, 3,420ஆக உயர்ந்தது.இதுவரை, 2,031 பேர் சிகிச்சை பெற்று வீடு திரும்பி உள்ளனர்; 58 பேர் உயிரிழந்த நிலையில், தற்போது, 1,311 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

காஞ்சிபுரத்தில் 93

காஞ்சிபுரம் மாவட்டத்தில், நேற்று புதிதாக, 93 பேருக்கு, வைரஸ் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டு உள்ளது.குன்றத்துார் - 40, ஸ்ரீபெரும்புதுார் - 14, வாலாஜாபாத் - எட்டு, காஞ்சிபுரம் - ஏழு, உத்திரமேரூர் - இரண்டு உட்பட, மொத்தம், 93 பேரை சேர்த்து, தொடர்ந்து, மாவட்டத்தில் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை, 1,673 ஆக அதிகரித்து உள்ளது.

காஞ்சிக்கு ஊரடங்கு இல்லை

காஞ்சிபுரம் மாவட்டத்தில், சென்னை போலீஸ் எல்லை பகுதியான குன்றத்துார், மாங்காடு, கோவூர், அய்யப்பந்தாங்கல் போன்ற பகுதிகளில் தான், ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளது. காஞ்சிபுரம் நகராட்சியில் நேரக் கட்டுப்பாடு மட்டுமே விதிக்கப்பட்டு உள்ளது. போதிய விழிப்புணர்வு இல்லாமல், கடந்த வாரம் ஞாயிற்றுக்கிழமை, அனைத்து கடைகளும் காஞ்சிபுரத்தில் அடைக்கப்பட்டிருந்தன. இன்று வழக்கம்போல், காலை, 6:00 மணி முதல் மாலை, 4:00 மணி வரை அனைத்து கடைகளும் இயங்கலாம் என, கலெக்டர் பொன்னையா தெரிவித்துள்ளார்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X