பொது செய்தி

தமிழ்நாடு

சுற்றித் திரியும் போலீசாருக்கும், 'ஆப்பு'

Added : ஜூன் 28, 2020
Share
Advertisement

பணி நேரத்தை தவிர்த்து, தேவையின்றி ஊர் சுற்றி திரியும் போலீசார் மீதும், நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

சென்னையில், கொரோனா பரவலை தடுக்கும் விதமாக, காவல் துறையினர் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகின்றனர்.குறிப்பாக, வாகன போக்குவரத்தை கட்டுப்படுத்தும் விதமாக, போக்குவரத்து போலீசார் பல சாலைகளை, இரும்பு தடுப்புகளால் மூடியுள்ளனர்.அதுமட்டுமின்றி, தேவையின்றி வாகனங்களில் சுற்றத்திரியும் நபர்கள் மீது, நடவடிக்கை எடுப்பதோடு, வாகனங்களையும் பறிமுதல் செய்கின்றனர்.

அந்த வகையில், தற்போது பணி நேரம் தவிர்த்து, போலீசார் பலரும் தேவையின்றி வாகனங்களில் சுற்றுவதும், போலீசாரின் குடும்பத்தைச் சேர்ந்தவர்கள், கார்களில், 'போலீஸ்' என, 'ஸ்டிக்கர்' ஒட்டி வலம் வருவதும் அதிகரித்தது.இதை அறிந்த, போக்குவரத்து போலீஸ் உயர் அதிகாரி, பணி நேரம் தவிர்த்து, தேவையின்றி சுற்றும் காவல் துறையினர் மீதும் நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டார்.

அதன்படி, நேற்று கிழக்கு மண்டல துணை ஆணையர் பெரோஸ்கான் அப்துல்லா, அண்ணாசாலையில் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தார்.அப்போது, சாதாரண உடையில், ஊர் சுற்றி வந்த போலீசார் மீது வழக்கு போட, உதவி ஆய்வாளரிடம் உத்தரவிட்டார். மேலும், போலீஸ் என ஸ்டிக்கர் ஒட்டி, காரில் வலம் வந்த காவலரை அழைத்து, உடனடியாக ஸ்டிக்கரை அகற்ற உத்தரவிட்டார்.சட்டம் என்பது அனைவருக்கும் ஒன்று தான் என்பதற்கு ஏற்ப, போக்குவரத்து துணை ஆணையர் செயல்பட்டு வருவது வரவேற்கத்தக்கது.

- நமது நிருபர் -

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X