பொது செய்தி

தமிழ்நாடு

மாதவரம் மார்க்கெட்டுக்கு புதிய அதிகாரி நியமனம்

Added : ஜூன் 28, 2020
Share
Advertisement

சென்னை : மாதவரம் பேருந்து நிலையத்தில் செயல்படும் தற்காலிக அங்காடிகளை கண்காணிக்க, புதிய அதிகாரியை நியமித்து, சி.எம்.டி.ஏ., உத்தரவிட்டுள்ளது.

கொரோனா தொற்று பரவலால், கோயம்பேடு மார்க்கெட்டில், ஏப்., 27ல், பூ, பழ விற்பனை நிறுத்தப்பட்டது. இவ்வியாபாரிகளுக்காக, மாதவரம் பேருந்து நிலையத்தில், தற்காலிக அங்காடி ஏற்படுத்தப்பட்டது. சமூக விலகல் விதி மீறல் இருப்பதாக புகார் எழுந்ததால், இங்குள்ள கடைகள் மாற்றி அமைக்கப்படுகின்றன. இதில், அங்காடி நிர்வாக குழு அதிகாரிகள், சி.எம்.டி.ஏ., கட்டுமானப் பிரிவு அதிகாரிகள், சீப் பிளானர்கள் செயல்பாடு, பலருக்கும் அதிருப்தியை ஏற்படுத்தியது.

தமிழக அரசு, இது விஷயத்தில் உரிய நடவடிக்கை எடுக்க, சி.எம்.டி.ஏ., நிர்வாகத்துக்கு கடுமையான உத்தரவுகள் பிறப்பித்தது. இதையடுத்து, மாதவரம் மார்க்கெட் கண்காணிப்புக்கு, புதிய அதிகாரியை நியமிக்க முடிவு செய்யப்பட்டது.இது தொடர்பாக சி.எம்.டி.ஏ., உறுப்பினர் செயலர் டி. கார்த்திகேயன் பிறப்பித்த உத்தரவு:

சாத்தாங்காடு இரும்பு விற்பனை அங்காடி வளாக நிர்வாக அலுவலராக உள்ள எஸ்.ஜானகி, மாதவரம் மார்க்கெட் செயல்பாடுகளை கண்காணிப்பார். மாதவரம் மார்க்கெட்டில் கொரோனா தடுப்பு வழிமுறைகளை, அனைவரும் முறையாக கடைப்பிடிப்பதை, இவர் உறுதி செய்ய வேண்டும்.இவ்வாறு, உத்தரவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X