வடசென்னையில் கமிஷனர் திடீர் ஆய்வு| Dinamalar

தமிழ்நாடு

வடசென்னையில் கமிஷனர் திடீர் ஆய்வு

Added : ஜூன் 28, 2020 | கருத்துகள் (1)
Share
 வடசென்னையில் கமிஷனர் திடீர் ஆய்வு

திருவொற்றியூர் : வடசென்னை காவல் நிலையங்களுக்கு, திடீரென வந்த கமிஷனர், வாகன சோதனை, ஊரடங்கு அமல்படுத்துவது குறித்து, ஆய்வு மேற்கொண்டார்.

சென்னையில், கொரோனா தொற்று நாளுக்கு நாள் தீவிரமடைந்து வருகிறது. வடசென்னையில், ராயபுரம், தண்டையார்பேட்டை, திருவொற்றியூர் போன்ற பகுதிகளில், தொற்று எண்ணிக்கை மளமளவென உயர்ந்து வருகிறது.மட்டுமின்றி, அத்தியாவசிய பணியில் ஈடுபட்டிருக்கும், 1,000த்திற்கும் மேற்பட்ட போலீசாரும், தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இந்நிலையில், வடசென்னையில் உள்ள காவல் நிலையங்களுக்கு, நேற்று காலை, திடீரென வந்த சென்னை கமிஷனர் ஏ.கே.விஸ்வநாதன் ஆய்வு மேற்கொண்டார்.திருவொற்றியூர் காவல் நிலையத்தின், சுற்றுப்புற சூழல் குறித்து, ஆய்வு மேற்கொண்டவர், பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்களை, பத்திரமாக நிறுத்தி வைக்க, போலீசாருக்கு அறிவுறுத்தினார்.

பின், தண்டையார்பேட்டை, புதுவண்ணாரப்பேட்டை போன்ற பகுதிகளில், ஊரடங்கு அமல்படுத்தும் பணியில், போலீசார் செயல்படும் விதம், ஆங்காங்கே சோதனை சாவடிகள் அமைத்து, வாகன போக்குவரத்து கட்டுப்படுத்தப் பட்டுள்ளதா என, ஆய்வு செய்தார்.எவ்வித முன்னறிவிப்பின்றி, கமிஷனர் ஆய்வு மேற்கொண்டதால், போலீசார் திக்குமுக்காடி போயினர்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X