சம்பவம் செய்தி

தமிழ்நாடு

மர்மமான முறையில் இறந்து கிடந்தவர் குறித்து விசாரணை

Added : ஜூன் 28, 2020
Share
Advertisement

செங்குன்றம் : வீட்டில், மர்மமான முறையில் இறந்து கிடந்தவர் குறித்து, போலீசார் விசாரிக்கின்றனர்.

சென்னை, செங்குன்றம் அடுத்த மொண்டியம்மன் நகரைச் சேர்ந்தவர் வெற்றி செல்வன், 45. இவர், சோழவரம் அடுத்த அலமாதியில், வெங்காய குடோன் நடத்தி வந்தார்.இவரது மனைவி மகாசக்தி, 36. தம்பதிக்கு இரு குழந்தைகள் உள்ளனர். கடந்த மாத இறுதியில், ஊரடங்கில் தளர்வுகள் அளிக்கப்பட்ட நிலையில், அவரது மனைவி மற்றும் குழந்தைகள், சொந்த ஊரான வேளாங்கண்ணி சென்றனர்.

வெற்றி செல்வன் மட்டும் வீட்டில் இருந்தார்.இந்நிலையில், நேற்று முன்தினம் இரவு, 8:30 மணி அளவில், அவர், நிர்வாணமாக இறந்து கிடப்பதாக, அக்கம்பக்கத்தினர் மூலம், சென்னை காவல் கட்டுப்பாட்டறைக்கு தகவல் கிடைத்தது.தகவல் அறிந்து, செங்குன்றம் போலீசார், சம்பவ இடத்திற்கு சென்று பார்த்தனர். வீட்டில் உள்ள பொருட்கள் அனைத்தும் சேதமடைந்து, குழாய் திறந்து விடப்பட்டு, தண்ணீர் முழுதும் வெளியேறி, தெருவில் பாய்ந்திருந்தது.

வெற்றிசெல்வன், நிர்வாண நிலையில், இறந்து கிடந்தார்.இது குறித்து, போலீசார், அவரது மனைவியிடம், மொபைல் போனில் விசாரித்தனர்.அப்போது, வெற்றி செல்வன், மன நல பாதிப்பு காரணமாக, 2013ம் ஆண்டு முதல், சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்ததும், அவ்வப்போது, வீட்டில் பொருட்களை சேதப்படுத்துவதும் தெரியவந்தது. மேலும், அவரது மரணம்குறித்து, போலீசார் விசாரிக்கின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X