பொது செய்தி

தமிழ்நாடு

நிர்மலாவுக்கு தி.மு.க., பதிலடி

Added : ஜூன் 28, 2020 | கருத்துகள் (4)
Share
Advertisement

சென்னை : தி.மு.க.,வை விமர்சித்த, மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமனுக்கு, அக்கட்சியின் வர்த்தகர் அணி செயலர் காசி முத்துமாணிக்கம், கண்டனம் தெரிவித்துள்ளார்.

'அவசர நிலையை பிரகடனம் செய்து, ஜனநாயக உரிமைகளை பறித்த காங்கிரசுடன், தி.மு.க., கைகோர்த்துவிட்டு, ஜனநாயகம் குறித்து பேசுவது ஆச்சர்யமாக உள்ளது' என, மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன், தி.மு.க., மீது குற்றம் சாட்டி இருந்தார்.இதற்கு பதிலளித்து, தி.மு.க., வர்த்தக அணி செயலாளர் காசிமுத்துமாணிக்கம் வெளியிட்ட அறிக்கை:

தி.மு.க., ஆட்சியை கலைத்த காங்கிரசுடன் இணைந்து, தி.மு.க., ஜனநாயகம் பேசுவதாக கூறுகிறார், நிர்மலா சீதாராமன். அப்போது, இந்திரா மன்னிப்பு கேட்டபின் தான் இணைந்தோம். அத்வானியை, 'செலக்டிவ் ஆம்னீஷியா' உள்ளவர் என, ஜெயலலிதா கூறினாரே, அப்போதெல்லாம், அ.தி.மு.க., மன்னிப்பு கேட்டதா? ஒரு வாக்கு வித்தியாசத்தில், பா.ஜ., ஆட்சியை, 13 மாதத்தில் கவிழ்த்த அ.தி.மு.க.,வுடன், மீண்டும், 2004ல் கூட்டணி வைத்தது ஏன்?

கம்யூனிஸ்ட், முஸ்லிம் லீக்குடன் சேர்ந்து, பா.ஜ., ஆட்சி அமைத்துள்ளது. காஷ்மீரில், பரூக் அப்துல்லா போன்றோரை, சிறை வைத்து கொடுமை செய்து வரும் பா.ஜ., ஜனநாயகம் குறித்து பேசுவதா?பொன்.ராதாகிருஷ்ணன், இல.கணேசன் வீட்டில் இருக்க, ௧௦ ஆண்டுக்குள், பா.ஜ.,வுக்கு வந்த நீங்களும், ஸ்ருதி ராணியும் மத்திய அமைச்சர்கள் ஆனதை, பா.ஜ., தொண்டர்கள் தாங்கும்போது, காங்கிரசை தி.மு.க., தாங்காதா? இவ்வாறு, அவர் கூறியுள்ளார்.

Advertisement


வாசகர் கருத்து (4)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
a natanasabapathy - vadalur,இந்தியா
28-ஜூன்-202020:02:08 IST Report Abuse
a natanasabapathy Thiruttu muttaalkal kazhagam. Congrassudan sernthu thamizharkallukku thurokam seytha katchi katcha theevu kaveri srilankan thamizhar anaithu vizhayankalilum pachai thurokam seytha katchi thi mu ka pathavikkaaka yaar kaalil vum aanaalum vizhuvaarkal
Rate this:
Cancel
Parthasarathy Badrinarayanan - jakarta,இந்தோனேசியா
28-ஜூன்-202013:13:16 IST Report Abuse
Parthasarathy Badrinarayanan திமுக கம்பெனி ஊழியர்களுக்கு அவ்வளவுதான் அறிவு. மூத்தோர் பலர் இருக்க மகனுக்கு பதவி தந்த ஸ்டாலினைத் தட்டிக் கேட்க வக்கற்றவர்கள்
Rate this:
Cancel
R SRINIVASAN - CHENNAI,இந்தியா
28-ஜூன்-202011:03:46 IST Report Abuse
R SRINIVASAN முட்டாள்தனமான கருத்து. ஐ மு கூட்டணியில் எவ்வளவோ seniors இருக்கயில் ராஜாவுக்கும் தயாநிதி மாறனுக்கு மந்திரி பதவி கொடுக்கப்பட்டது. அது எப்படி?
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X