சம்பவம் செய்தி

தமிழ்நாடு

பெயின்ட் தயாரிப்பு நிறுவனத்தில் தீ விபத்து

Added : ஜூன் 28, 2020
Share
Advertisement

செங்குன்றம் : பெயின்ட் தயாரிப்பு நிறுவனத்தில் ஏற்பட்ட தீ விபத்தில், பெயின்ட் மூலப்பொருட்கள் மற்றும்இயந்திரங்கள் எரிந்து நாசமாகின.

சென்னை, செங்குன்றம் அடுத்த கிராண்ட் லைன் ஊராட்சி, ஜமுனா நகரில், அயனாவரத்தைச் சேர்ந்த சீனிவாசன் என்பவருக்கு சொந்தமான குடோன் உள்ளது.அங்கு, புழல் காவாங்கரை, ஜெயராம் சக்திவேல் நகரைச் சேர்ந்த சீனாராம், 46, என்பவர், இரண்டு ஆண்டாக பெயின்ட் தயாரிக்கும் நிறுவனம், நடத்தி வருகிறார்.அந்த குடோனில், மூலப்பொருட்கள் இருப்பு வைக்கப்பட்டிருந்தன.

இந்த நிலையில், நேற்று மதியம், 2:00 மணி அளவில், குடோனின் ஒரு பகுதியில் குவித்து வைக்கப்பட்டிருந்த, பிளாஸ்டிக் கழிவுகளில் தீ பிடித்து, மற்ற பகுதிக்கும், மளமளவென பரவியது.அதில், தயாரிக்கப்பட்ட பெயின்ட் டின்கள், மூலப்பொருட்கள், இயந்திரங்கள் எரிந்து நாசமாகின. கடுமையான புகை மண்டலத்தால், சுற்றுவட்டாரங்களில் வசித்தோருக்கு கண் எரிச்சல், மூச்சுத்திணறல் ஏற்பட்டது.

தகவல் அறிந்து, செங்குன்றம், மாதவரம், மணலி, அம்பத்துார், ஜெ.ஜெ., நகர் தீயணைப்பு நிலைய வீரர்கள் வந்து, தீ அணைக்கும் பணியில் ஈடுபட்டனர்.இரண்டு மணி நேரத்திற்கு பின், முழுமையாக அணைக்கப்பட்டது. ஊரடங்கால், அங்கு பணியாளர்கள் யாரும் இல்லை. அதனால், அதிர்ஷ்டவசமாக உயிர்சேதம் தவிர்க்கப்பட்டது. தீ விபத்து குறித்து, செங்குன்றம் போலீசார் விசாரிக்கின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X