சம்பவம் செய்தி

தமிழ்நாடு

கர்ப்பிணிகள் உட்பட 44 பேருக்கு தொற்று ; கடலூரில் பாதிப்பு 976 ஆக உயர்வு

Added : ஜூன் 28, 2020
Share
Advertisement

கடலுார் : கடலுார் மாவட்டத்தில் மேலும் 44 பேருக்கு தொற்று உறுதியானதால் பாதித்தவர்கள் எண்ணிக்கை 976 ஆக உயர்ந்துள்ளது.

கடலுார் மாவட்டத்தில் கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை நேற்று முன்தினம் வரை 932 பேர் என, மாவட்ட நிர்வாகம் அறிவித்தது. கோவா, சென்னை, திண்டுக்கல், கேரளா, கர்நாடகா ஆகிய பகுதிகளில் இருந்து திரும்பிய கடலுார், ஒரத்துார், நெல்லிக்குப்பம் விருத்தாசலம், அண்ணாகிராமம், பண்ருட்டி பகுதிகளை சேர்ந்த 20 பேருக்கு நேற்று தொற்று உறுதியானது.

மேலும், பண்ருட்டியில் 2 கர்ப்பிணிகள், குமராட்சியில் ஒரு கர்ப்பிணி, பண்ருட்டி, ஒரத்துார், கம்மாபுரம், குறிஞ்சிப்பாடியில் அரசு செவிலியர், டிரைவர் உள்ளிட்ட தலா ஒருவர், தொற்று பாதிக்கப்பட்டவர்களுடன் தொடர்பில் இருந்த கம்மாபுரத்தில் 7 நபர்கள், பண்ருட்டியில் 4, சிதம்பரம் நகராட்சி பகுதி மற்றும் மங்களூரில் தலா 1, கடலுாரில் 2 பேர், நோய் அறிகுறியுடன் பண்ருட்டியில் ஒருவர், மங்களூரில் தனிமைப்படுத்தப்பட்ட ஒருவர் என 24 பேருக்கும் தொற்று உறுதியானது.இதனால் மாவட்டத்தில் தொற்று பாதித்தவர்கள் எண்ணிக்கை 976 ஆக உயர்ந்துள்ளது. நேற்று முன்தினம் வரை, 534 பேர் குணமாகிய நிலையில், நேற்று மேலும், 38 பேர் குணமாகியதால் குணமானோர் எண்ணிக்கை 572 ஆக உயர்ந்துள்ளது.

மாவட்டத்தில் இதுவரை 22 ஆயிரத்து 706 பேருக்கு பரிசோதனை மேற்கொள்ளப்பட்டதில் 976 பேருக்கு தொற்று உறுதியானது. 19 ஆயிரத்து 836 தொற்று இல்லை. 1,894 பேருக்கு பரிசோதனை முடிவுகள் வர வேண்டியுள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X