சம்பவம் செய்தி

தமிழ்நாடு

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் நேற்று 25 பேருக்கு கொரோனா

Added : ஜூன் 28, 2020
Share
Advertisement

கள்ளக்குறிச்சி : கள்ளக்குறிச்சி மாவட்டத்தில், நேற்று 25 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதைத் தொடர்ந்து, பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 552 ஆக உயர்ந்தது.

இதுகுறித்து கலெக்டர் கிரண் குராலா விடுத்துள்ள செய்திக்குறிப்பு:கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் கொரோனா தொற்றினால் ஏற்கனவே 527 பேர் பாதிக்கப்பட்டிருந்தனர். இந்நிலையில், 122 பேருக்கு பரிசோதனை செய்ததில் 17 பேருக்கும், மேலும், சேலம், கிருஷ்ணகிரி, திருச்சி, விழுப்புரம் ஆகிய மாவட்டங்களில் பரிசோதனை செய்ததில் கள்ளக்குறிச்சி மாவட்டத்தைச் சேர்ந்த 8 பேர், என மொத்தம் 25 பேருக்கு நேற்று தொற்று உறுதி செய்யப்பட்டது.இதனால் மாவட்டத்தில் பாதிப்படைந்தோர் எண்ணிக்கை 552 ஆக உயர்ந்தது. இதில் 346 பேர் குணமடைந்துள்ளனர். ஒருவர் இறந்தார். மருத்துவ கண்காணிப்பில் உள்ள 205 பேரில் 71 பேருக்கு மட்டுமே அறிகுறி உள்ளது. 134 பேருக்கு அறிகுறி இல்லை.இவ்வாறு செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X