சம்பவம் செய்தி

தமிழ்நாடு

2 எஸ்.ஐ.,க்கள் உட்பட மூவருக்கு 'சார்ஜ் மெமோ'

Added : ஜூன் 28, 2020
Share
Advertisement

உளுந்துார்பேட்டை : திருநாவலுார் அருகே, சூதாட்ட வழக்கில் பறிமுதல் செய்யப்பட்ட பணத்தை கணக்கில் காட்டாத 2 சப் இன்ஸ்பெக்டர்கள் உட்பட மூவருக்கு, எஸ்.பி., 'சார்ஜ் மெமோ' வழங்கினார்.

கள்ளக்குறிச்சி மாவட்டம், திருநாவலுார் காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட கொரட்டாங்குறிச்சி கிராமத்தில், கடந்த சில தினங்களுக்கு முன், உளுந்துார்பேட்டை சப் இன்ஸ்பெக்டர்கள் ஜெயச்சந்திரன், வினோத்குமார், காவலர் தீபன் ஆகியோர், பணம் வைத்து சூதாடிய நபர்களை பிடித்தனர். இதில் நால்வர் மீது மட்டும் வழக்குப் பதிந்து, போலீஸ் நிலைய ஜாமினில் விடுவித்தனர்.பிடிபட்டவர்களிடமிருந்து பறிமுதல் செய்யப்பட்ட பணத்தை வழக்கில் காட்டவில்லை. இதுகுறித்து தகவலறிந்த எஸ்.பி., (பொறுப்பு) ஜெயக்குமார் விசாரணை நடத்தினார்.

நேற்று எஸ்.பி., கூறுகையில், ' கொரட்டாங்குறிச்சியில் சூதாட்ட கும்பலை, உளுந்துார்பேட்டை சப் இன்ஸ்பெக்டர்கள் ஜெயச்சந்திரன், வினோத்குமார், காவலர் தீபன் ஆகியோர் பிடித்துள்ளனர். இது தொடர்பாக அந்த காவல் நிலைய எல்லையில் உள்ள இன்ஸ்பெக்டர், சப் இன்ஸ்பெக்டர் களுக்கு தகவல் தெரிவிக்கவில்லை. சூதாட்ட கும்பலிடமிருந்து 1.50 லட்சம் ரூபாய் பணம் பறிமுதல் செய்துள்ளனர். ஆனால், இந்த பணத்தை வழக்கில் காட்டவில்லை. இதனால், 2 சப் இன்ஸ்பெக்டர்கள் உட்பட மூவருக்கு 'சார்ஜ் மெமோ' கொடுத்துள்ளேன்' என்றார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X