அடுத்த அதிபர் ஜோ பிடன் தான்: டிரம்ப் விரக்தி பேச்சு

Updated : ஜூன் 28, 2020 | Added : ஜூன் 28, 2020 | கருத்துகள் (14) | |
Advertisement
வாஷிங்டன் : 'என்னை சிலருக்குப் பிடிக்கவில்லை. அதனால், அடுத்த அதிபராக, ஜோ பிடன் வருவதற்கு வாய்ப்புள்ளது' என, அமெரிக்க அதிபர், டொனால்டு டிரம்ப், விரக்தியில் கூறியுள்ளார்.அமெரிக்க அதிபர் பதவிக்கான தேர்தல், நவ., 3ல் நடக்க உள்ளது. இதில், குடியரசு கட்சி சார்பில், டொனால்டு டிரம்ப் மீண்டும் போட்டி இடுகிறார். ஜனநாயகக் கட்சி சார்பில், முன்னாள் துணை அதிபர், ஜோ பிடன்

வாஷிங்டன் : 'என்னை சிலருக்குப் பிடிக்கவில்லை. அதனால், அடுத்த அதிபராக, ஜோ பிடன் வருவதற்கு வாய்ப்புள்ளது' என, அமெரிக்க அதிபர், டொனால்டு டிரம்ப், விரக்தியில் கூறியுள்ளார்.latest tamil news


அமெரிக்க அதிபர் பதவிக்கான தேர்தல், நவ., 3ல் நடக்க உள்ளது. இதில், குடியரசு கட்சி சார்பில், டொனால்டு டிரம்ப் மீண்டும் போட்டி இடுகிறார். ஜனநாயகக் கட்சி சார்பில், முன்னாள் துணை அதிபர், ஜோ பிடன் வேட்பாளராக நிறுத்தப்பட உள்ளார்.சமீபத்திய கருத்துக் கணிப்பு முடிவுகள், ஜோ பிடனுக்கு ஆதரவாக உள்ளன. மற்றொரு கருத்துக் கணிப்பில், 'மக்கள் செல்வாக்கை, டிரம்ப் இழந்து வருகிறார்' என, தெரிய வந்துள்ளது.

இந்நிலையில், 'பாக்ஸ் நியூஸ்' என்ற 'டிவி சேனலுக்கு' அளித்துள்ள பேட்டியில், டிரம்ப் கூறியுள்ளதாவது: ஜோ பிடனால், இரண்டு வார்த்தைகளைகூட சேர்த்து பேச முடியாது. ஆனால், அவர் உங்களுடைய அடுத்த அதிபராக உள்ளார். ஏனென்றால், சிலருக்கு என்னைப் பிடிக்கவில்லை. அதனால், இது ஏற்பட வாய்ப்புள்ளது. ஆனால், நான் என்னுடைய பணிகளை, கடமையை தொடர்ந்து செய்வேன். இவ்வாறு அவர் கூறினார்.


latest tamil news


இது ஒருபுறம் இருக்க, 'அமெரிக்க வாழ் இந்தியர்கள் வழக்கமாக, ஜனநாயகக் கட்சிக்கே ஆதரவாக இருப்பர். ஆனால், தற்போது, 50 சதவீதத்துக்கும் அதிகமான இந்தியர்கள், டிரம்புக்கு ஆதரவாக உள்ளனர்' என, ஒரு கருத்துக் கணிப்பில் தெரியவந்துள்ளது.

'அதிபர் டிரம்புக்கு, இந்தியர்கள் மற்றும் லட்சக்கணக்கான அமெரிக்க வாழ் இந்தியர்களின் ஆதரவு உள்ளது. அதற்காக, அவர் தன் நன்றியை தெரிவித்துள்ளார். நாட்டின் வளர்ச்சியில், அமெரிக்க வாழ் இந்தியர்களின் பங்களிப்பை அவர் எப்போதும் பாராட்டத் தவறியதில்லை' என, வெள்ளை மாளிகை செய்தித் தொடர்பாளர், சாரா மேத்யூஸ் கூறியுள்ளார்.10 ஆண்டு சிறை:


ஆப்ரிக்க அமெரிக்கர், ஜார்ஜ் பிளாய்டு கொல்லப்பட்டதைத் தொடர்ந்து, அமெரிக்காவில் இனவெறிக்கு எதிரான போராட்டங்கள் நடந்தன. அப்போது, பல தலைவர்களின் சிலைகள், நினைவிடங்கள், வரலாற்று சின்னங்கள் சேதப்படுத்தப்பட்டன மற்றும் அவமதிக்கப்பட்டன. அதையடுத்து, சிலைகள், நினைவிடங்கள் பாதுகாப்பை உறுதி செய்யும் புதிய உத்தரவில், டிரம்ப் கையெழுத்திட்டுள்ளார். 'சேதப்படுத்துவோருக்கு, 10 ஆண்டுகள் வரை சிறை மற்றும் அபராதம் விதிக்கப்படும்' என, உத்தரவில் கூறப்பட்டுள்ளது.

Advertisement
வாசகர் கருத்து (14)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Loganathaiyyan - Kolkata,இந்தியா
28-ஜூன்-202018:56:58 IST Report Abuse
Loganathaiyyan அப்போ பிடன் வோட்டு எண்ணிக்கை சரிந்தது???இந்த மாதிரி ட்ரம்பின் ஆசீர்வாதத்தினால்????
Rate this:
Cancel
Ravi - Danbury, CT,யூ.எஸ்.ஏ
28-ஜூன்-202016:34:19 IST Report Abuse
Ravi அமெரிக்கா ஊடகங்கள் பொய்யானவை - போன தேர்தலில் கூட இவர்கள் ஹிலாரி தான் வருவார் என்று ஆருடம் கூறினார்கள் - அனால் அது பொய்த்தது அதன் ஏமாற்றத்தில் எல்லா ஊடகங்களும் டிரம்ப் ஐ எதிர்த்து காழ்ப்புணர்ச்சியை காட்டினார் தேர்தலுக்கு முன் என்ன வாக்குறுதிகள் கொடுத்தாரோ அதை நிறைவேற்றிய ஒரே துணிச்சலான அதிபர் டிரம்ப் உள்ளொன்று வைத்து புறமொன்று பேசி மக்களையும் நாட்டையும் சுயநலத்துக்காக ஏமாற்றத்தவர் குடியரசுக்கட்சிஇணர், டிரம்ப் ஆதரவாளர்கள், நாட்டு பற்றாளர்கள் அமைதியாக மீண்டும் டிரம்ப் ஐ தேர்ந்தெடுபார்கள் இன்றைய சூழலில் தன்னலமற்ற துணிவான அமெரிக்கா அதிபர் தேவை அதுதான் அமெரிக்காவிற்கும், உலகத்திற்கும், இந்தியாவிற்கும் நல்லது சீனாவின் ஆதிக்கத்தை அடக்க இவர்தான் சரியான அதிபர் ஜெய் அமெரிக்கா ஜெய் ஹிந்த
Rate this:
Cancel
Raj - nellai,இந்தியா
28-ஜூன்-202016:06:31 IST Report Abuse
Raj நல்ல செய்தி அமெரிக்கா மக்களுக்கு. டிரம்ப் புக்கு நல்ல பாடம் புகட்ட வேண்டும்
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X