சம்பவம் செய்தி

தமிழ்நாடு

கொரோனாவால் ஆனி திருமஞ்சன தேரோட்டம் ரத்து தேவசபையில் சுவாமிக்கு சிறப்பு ஆராதனை

Added : ஜூன் 28, 2020
Share
Advertisement

சிதம்பரம் : கொரோனா பாதிப்பால், சிதம்பரம் நடராஜர் கோவில் ஆனி திருமஞ்சன தேரோட்டம் ரத்து செய்யப்பட்டு, கோவில் வளாகத்திலேயே சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம், ஆராதனை நடத்தப்பட்டது.

கடலுார் மாவட்டம், சிதம்பரம் நடராஜர் கோவிலில் ஆனி திருமஞ்சன தரிசன விழா, கடந்த 19ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. நேற்று தேர் திருவிழாவும், இன்று தரிசன விழாவும் நடைபெற இருந்தது.கொரோனா வைரஸ் பரவல் காரணமாக, தேரோட்டம் ரத்து செய்யப்பட்டு, கோவிலின் உள் பிரகாரத்தில் சுவாமி உலா சென்று, ஆயிரங்கால் மண்டபத்தில் வைத்து அபிஷேகம் செய்ய முடிவு செய்யப்பட்டது.இவ்விழாவை நடத்த, 150 தீட்சிதர்களுக்கு மட்டும் அனுமதி அளிக்கப்பட்டது. இவர்களுக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டதில், இருவருக்கு தொற்று உறுதியானது.

இதனால் விழாவை நடத்துவதில் சிக்கல் ஏற்பட்டது. தீட்சிதர்களுடன் நடந்த பேச்சு வார்த்தைக்கு பின், விழாவில் 20 பேர் மட்டுமே பங்கேற்க அனுமதி அளிக்கப்பட்டது.நேற்று தேர் திருவிழாவிற்கான பூஜை பணிகளில் தீட்சிதர்கள் ஈடுபட்டனர். சுவாமி ஆனந்த நடராஜமூர்த்தி, சிவகாமசுந்தரியை தேவசபையில் எழுந்தருளச் செய்து, மண்டகப்படி தீபாராதனை செய்தனர். அதிகாலையில் கோவிலுக்குள் தீட்சிதர்கள் பலர் செல்ல முயன்றனர். அவர்களை, கீழ வீதியில் போலீசார் தடுத்து நிறுத்தினர். கோவிலின் முக்கிய விழாக்களில் அனைத்து தீட்சிதர்களும் குடும்பத்துடன் பங்கேற்று, சுவாமி தரிசனம் செய்வர்.

கொரோனா அச்சம் காரணமாக தீட்சிதர்களின் குடும்பத்தினர் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்ய முடியாததுடன், தீட்சிதர்களே உள்ளே சென்று சுவாமியை தரிசிக்க முடியாமல் போனது. கோவிலுக்குள் சென்று விடலாம் என ஆர்வத்தில் வந்தவர்கள், தடுத்து நிறுத்தப்பட்டதால், தீட்சிதர்கள் சிலர் கண்ணீர் விட்டனர்.மாலை 5.15 மணிக்கு, எப்போதும்போல, சுவாமி தேவசபையிலிருந்து புறப்பட்டு, ஆயிரங்கால்மண்டபத்தில் எழுந்தருளிார்.இன்று அதிகாலை 2.00 மணிக்கு, அபிஷேகத்துடன் ஆனி திருமஞ்சன தரிசன விழா துவங்குகிறது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X