சீனாவின் ஆக்கிரமிப்புக்கு 'ஆசியான்' போர்க்கொடி

Updated : ஜூன் 28, 2020 | Added : ஜூன் 28, 2020 | கருத்துகள் (10)
Share
Advertisement
மணிலா: தென் சீன கடலின் பெரும்பகுதியை ஆக்கிரமித்துள்ள சீனாவுக்கு, 'ஆசியான்' எனப்படும் தெற்காசிய நாடுகளுக்கான ஒத்துழைப்பு அமைப்பு கண்டனம் தெரிவித்துள்ளது.'கடந்த, 1982ல் உருவாக்கப்பட்ட ஐ.நா., சட்டத்தின்படியே, கடல் எல்லையை நிர்ணயிக்க வேண்டும்' என, அவை வலியுறுத்தியுள்ளன. ஒரு பக்கம் நிலப்பரப்புகளை ஆக்கிரமித்து வரும், நம் அண்டை நாடான சீனா, தென் சீனக் கடல்
Asean, China, Sea claims, Beijing, South China Sea, சீனா, ஆக்கிரமிப்பு, ஆசியான், போர்க்கொடி

மணிலா: தென் சீன கடலின் பெரும்பகுதியை ஆக்கிரமித்துள்ள சீனாவுக்கு, 'ஆசியான்' எனப்படும் தெற்காசிய நாடுகளுக்கான ஒத்துழைப்பு அமைப்பு கண்டனம் தெரிவித்துள்ளது.


latest tamil news'கடந்த, 1982ல் உருவாக்கப்பட்ட ஐ.நா., சட்டத்தின்படியே, கடல் எல்லையை நிர்ணயிக்க வேண்டும்' என, அவை வலியுறுத்தியுள்ளன. ஒரு பக்கம் நிலப்பரப்புகளை ஆக்கிரமித்து வரும், நம் அண்டை நாடான சீனா, தென் சீனக் கடல் பகுதியிலும், ஆக்கிரமிப்பு செய்து வருகிறது. பழைய வரலாற்றை காண்பித்து, தென் சீனக் கடலின் பெரும்பகுதிக்கு சீனா உரிமை கொண்டாடி வருகிறது.

மேலும், அக் கடல் பகுதியில் உள்ள பல பவளப் பாறைகள், சிறிய தீவுகளை ஆக்கிரமித்து, தன் படைகளை நிறுத்தி வைத்துள்ளது. இது தொடர்பாக, வியட்நாம், பிலிப்பைன்ஸ், மலேசியா, புருனே உட்பட பல நாடுகளுடன் பிரச்னை உள்ளது. இந்நிலையில், ஆசியான் எனப்படும் தெற்காசிய நாடுகள் ஒத்துழைப்புக்கான அமைப்பின் கூட்டம், 'வீடியோ கான்பரன்ஸ்' முறையில் நடைபெற்றது. இந்த அமைப்பில் உள்ள, 10 நாடுகளின் தலைவர்கள் இந்தக் கூட்டத்தில் பங்கேற்றனர்.


latest tamil news


அதன்பிறகு வெளியிடப்பட்டுள்ள செய்தியில் கூறப்பட்டுள்ளதாவது: சர்வதேச கடல் எல்லைகளில் மீன் பிடிப்பது, எண்ணெய் வளங்களை பயன்படுத்திக் கொள்வது உட்பட, நாடுகளுக்கான கடல் எல்லை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. கடந்த, 1982ல் ஐ.நா., கடல் சட்ட ஒப்பந்தத்தில் இது தொடர்பாக தெளிவாக குறிப்பிடப்பட் டுள்ளது. அதன்படியே, தென் சீனக் கடலிலும், எல்லைகள் வரையறுக்கப்பட வேண்டும்.இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.

Advertisement
வாசகர் கருத்து (10)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
மலரின் மகள் - EDINBURGH,யுனைடெட் கிங்டம்
29-ஜூன்-202000:41:40 IST Report Abuse
மலரின் மகள் பெயரளவிற்கு இப்படி ஒரு ஆலோசனையை செய்து விட்டு பின்னால் சமயங்களுக்கு ஏற்ப செயல்பட்டு கொள்ளலாம். சீனாவின் உதவி இவர்களுக்கு பெருமளவில் தேவை படுகிறது. பேசாமல் சீனாவின் ராணுவ குடைக்குள் இணைந்து கொள்ளலாம். அமெரிக்கா தற்போது தனது பார்வையை மாற்றுகிறது. ஐரோப்பாவிலிருந்து ஆசியாவிற்கு. ஐரோப்பாவால் அவர்களுக்கு எந்த பிரயோசனமும் இல்லை பெரியளவில் என்று சொல்கிறார்கள். ரசியாவை எதிர்ப்பதற்கு ஐரோப்பாவின் பல அரசுகளை நேட்டோ வில் இணைத்திருந்தார்கள். இப்போது அதற்கு அவசியம் இல்லை என்பதை விட, துருக்கி, கிறிஸ் போன்ற தேசங்களில் எந்த பயனும் இல்லை. ஆக நேட்டோ அமைப்பையே மாற்றி கொள்ள வேண்டிய நிலையில் இருக்கிறது அமெரிக்கா. அணிசேரா நாடுகள் காமன்வெல்த் நாடுகள் மற்றும் மிகவும் வேகமாக வளரும் நாடுகள், ஆஸ்திரேலியா, இந்திய, ஜப்பான், தென் கொரியாவை தனது கவனத்தில் வைக்கிறது. இந்திய ஜப்பான் ஆஸ்திரேலிய தென்கொரிய தேசத்தை ராணுவ கூட்டமைப்பில் சேர்த்து கொண்டு புதிய அமைப்புக்களை உருவாக்கி கொள்ள முயல்கிறது, நேட்டோ இயற்கையாக நீர்த்து போகும் என்று சொல்கிறார்கள். ஐரோப்பாவை விட இப்போது சீனாவே எதிரிப்பதே அவர்களுக்கு முக்கியம் அதற்கு இங்கே அவர்களின் ராணுவப்பலம் அதிகரிக்கவேண்டும் கூட்டணி தேவை. நமக்கும் இந்த கூட்டமைப்பு மிகவும் முக்கியமே.
Rate this:
Cancel
r.sundaram - tirunelveli,இந்தியா
28-ஜூன்-202016:15:36 IST Report Abuse
r.sundaram சண்டியனுக்கு சண்டித்தனத்தினால் தான் பதில் கொடுக்க வேண்டும். இந்திய சீனா போர் வருமானால் எல்லோருமாக சேர்ந்து சீனாவை, அப்படி ஒரு தேசம் இருந்தது என்பதே இல்லாமல் செய்துவிடவேண்டும்.
Rate this:
Cancel
Hari - chennai,இந்தியா
28-ஜூன்-202010:10:26 IST Report Abuse
Hari ஹிட்லர் மறுபடியும் யுயிர்த்தெழுந்துள்ளார் ( ஜின் பிங்க்) இப்போது உலகை ரட்சிக்க அமெரிக்க காலத்தில் இறங்கினால்த்தான் உலக நாடுகளை காக்க முடியும் .சீனாவிடம் கடன் வாங்கிய அணைத்து நாடுகளும் இப்போது கலக்கத்தில் உள்ளன .
Rate this:
NicoleThomson - சிக்கநாயக்கனஹள்ளி , துமகூரு near blr,இந்தியா
28-ஜூன்-202022:17:23 IST Report Abuse
NicoleThomsonபாகிஸ்தான் சார்ந்த ஒரு பத்திரிக்கை எழுதியது என்னவென்றால் இப்போதைக்கு சீனா அழிந்து விட்டால் கொடுத்த கடனை வாங்க வரமாட்டார்கள் நாமும் தப்பி விடுவோம் என்று...
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X