பொது செய்தி

இந்தியா

கூட்டுறவு வங்கி அவசர சட்டம்: ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் ஒப்புதல்

Updated : ஜூன் 28, 2020 | Added : ஜூன் 28, 2020 | கருத்துகள் (12)
Share
Advertisement
புதுடில்லி : நாடு முழுதும் உள்ள கூட்டுறவு வங்கிகளை, ரிசர்வ் வங்கியின் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வரும் அவசர சட்டத்துக்கு, ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த், ஒப்புதல் அளித்தார்.அவசர சட்டம்நாடு முழுதும், 1,482 நகர கூட்டுறவு வங்கிகள் செயல்படுகின்றன. இவற்றில், 8.6 கோடிக்கும் அதிகமான வாடிக்கையாளர்களின், 4.85 லட்சம் கோடி ரூபாய், 'டிபாசிட்' உள்ளது. இவற்றின் நிர்வாகம்,

புதுடில்லி : நாடு முழுதும் உள்ள கூட்டுறவு வங்கிகளை, ரிசர்வ் வங்கியின் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வரும் அவசர சட்டத்துக்கு, ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த், ஒப்புதல் அளித்தார்.latest tamil newsஅவசர சட்டம்


நாடு முழுதும், 1,482 நகர கூட்டுறவு வங்கிகள் செயல்படுகின்றன. இவற்றில், 8.6 கோடிக்கும் அதிகமான வாடிக்கையாளர்களின், 4.85 லட்சம் கோடி ரூபாய், 'டிபாசிட்' உள்ளது. இவற்றின் நிர்வாகம், அந்தந்த மாநில அரசுகளின் கட்டுப்பாட்டில் உள்ளது. சமீப காலமாக, பஞ்சாப் மற்றும் மஹாராஷ்டிர மாநிலங்களில் உள்ள கூட்டுறவு வங்கிகளில் முறைகேடு நடந்தது. இதனால், அந்த வங்கிகளின் வாடிக்கையாளர்கள், தங்கள் பணத்தை எடுக்க முடியாமல் பாதிக்கப்பட்டனர்.

இந்த பிரச்னைக்கு தீர்வு காணும் வகையில், கூட்டுறவு வங்கிகளின் நிர்வாகத்தை ரிசர்வ் வங்கியின் கட்டுப்பாட்டில் கொண்டு வருவதற்கு, வங்கிகள் ஒழுங்குமுறை சட்டத்தில் திருத்தம் செய்து, சமீபத்தில் அவசர சட்டம் பிறப்பிக்கப்பட்டது.இந்த அவசர சட்டத்துக்கு, ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த், தற்போது ஒப்புதல் அளித்துள்ளார்.

இது தொடர்பாக, ஜனாதிபதி மாளிகை வெளியிட்டுள்ள அறிவிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது: கூட்டுறவு வங்கிகளின் நிர்வாகத்தை மேம்படுத்தவும், வாடிக்கையாளர்களின் நலனை பாதுகாக்கவும், இந்த அவசர சட்டம் பிறப்பிக்கப்பட்டுள்ளது.


latest tamil news
பாதிப்பு இல்லை


அதேநேரத்தில், மாநில அரசுகளின் கூட்டுறவு சட்டத்தின் கீழ் இயங்கும் மாநில பதிவாளர் கூட்டுறவு சங்கத்தின் அதிகாரத்துக்கு, இந்த சட்டம் எந்த பாதிப்பையும் ஏற்படுத்தாது. மேலும், பி.ஏ.சி.எஸ்., எனப்படும், விவசாய முதன்மை கடன் சங்கத்துக்கு, இந்த சட்டம் பொருந்தது. இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.

Advertisement
வாசகர் கருத்து (12)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
krishna -  ( Posted via: Dinamalar Android App )
28-ஜூன்-202014:55:16 IST Report Abuse
krishna Ayyayo 380 kodi koduthadhai aatchikku vandhu kooturavu vangila 3800 kodiya aataya podalamna RBI pudichuduvanugale enna seyya.Aanalum indha Modi romba mosam.MP fund aataya poda vidama mudakkitaru.Naan ennadhan seiven.Idhu sudalai khan mind voice
Rate this:
Cancel
konanki - Chennai,இந்தியா
28-ஜூன்-202014:14:33 IST Report Abuse
konanki முதலில் நகர்புற கூட்டுறவு வங்கிகள். அடுத்த மூவ் மாநில கூட்டுறவு வங்கிகள். மாநிலங்களில் இந்த கூட்டுறவு வங்கிகள் ஊழலின் ஊற்றுக்கண்
Rate this:
Cancel
svs - yaadum oore,இந்தியா
28-ஜூன்-202012:20:49 IST Report Abuse
svs //....பல ஆயிரம் கோடிகளை தொழில் முதலீடு...//.....இந்தியாவிலேயே கார்பொரேட் கம்பனிகளில் அதிக சம்பளம் வாங்கும் பணக்காரர் சென்னையில்தான் உள்ளார் ..... அதுவும் கொஞ்சம் கூட அருவருப்பில்லாமல் சொகுசு வாழ்க்கை வாழ்ந்து கொண்டுள்ளார் ....அதை சரி என்று வைத்து கொள்பவர்கள் உள்ளூர் மக்களின் பணத்தை உள்ளூர் காரர்தானே கொள்ளையடிக்கிறார் என்று புலம்பாமல் ரிசர்வ் வங்கி கட்டுப்பாட்டில் இல்லாத கூட்டுறவு வங்கியில் முதலீடு செய்யலாம் ....
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X